Logesh kanagaraj : லோகேஷ் கனகராஜ் அவர்கள் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு இயக்குனர். அதுமட்டுமல்லாமல் வளர்ந்து வரும் ஒரு இயக்குனரும் ஆவார். இவர் கதை அனைத்துமே ஒரு தொடர்ச்சியான பாதையாக அமைந்துள்ளதால், தனக்கென ஒரு யூனிவெர்ஸ்ஸை உருவாக்கி உள்ளார்.
சினிமாவிற்கு அடுத்த கட்ட தந்திரத்தை கடைபிடிக்க திக்கற்று கொடுத்துள்ளார் என்றே கூறலாம். இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளன.
மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இவ்வாறு தற்போது இவர் இயக்கத்தில் கூலி படம் வெளிவரவிருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பது மேலும் சிறப்பு.
எனக்கு ஒரு கார் வாங்கி கொடுத்தாரு, அவரை மிஸ் பண்ணுறேன்..
தற்போது இவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் இவர் உலகநாயகன் அவர்களை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது விக்ரம் படம் ஷூட்டிங் அப்போ கமல்ஹாசன் அவர்கள் லோகேஷ் அவர்களை காரில் பிக்கப் செய்து திருப்பவும் ட்ரோப் செய்துள்ளாராம்.
அதுமட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜ் அவர்களுக்கு தனியாக ஒரு காரை வங்கியொடுத்துள்ளாராம். அதுவும் lexus கார் என கமல்ஹாசன் அவர்களை பற்றி பெருமையாக பேசியுள்ளார். அவர் இருக்கும் உச்சத்திற்கு அவர் இவ்வாறு நடந்து கொண்டது என்னை ஆச்சரியப்படுத்தியது என்றும் கூறியுள்ளார்.
நான் கமல்ஹாசன் அவர்களை மிகவும் மிஸ் பண்றேன். அவரோடு திரும்பவும் வேலை செய்ய ஆசைப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார். வாங்க கமல் சார் என அன்போடு அழைப்பு விடுத்துள்ளார் லோகேஷ். அப்போ உறுதியாக கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் அவர்களின் கூட்டணியில் இன்னொரு படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.