Sun Tv Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்கள் மூலம் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து வருகிறது. முக்கியமாக சாயங்காலம் போடும் சீரியலுக்கு மக்கள் பேரா ஆதரவு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் மகா சங்கமமாக மருமகள் மற்றும் மூன்று முடிச்சு சீரியல் ஒளிபரப்பாகியது. இந்த மகா சங்கமத்தால் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று சன் டிவி விட்ட இடத்தை பிடித்து விட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த மாதம் திருமண திருவிழாவாக கொண்டாடுவதற்கு சன் டிவி சேனல் தயாராகிவிட்டது. அதிலும் ஆடி மாசம் ஆனாலும் பரவாயில்லை என்பதற்கு ஏற்ப நான்கு ஜோடிகளுக்கு கல்யாணம் நடக்கப் போகிறது. இதில் மருமகள் சீரியலில் சத்யா மற்றும் கார்த்திக்கு திருமணம் நடக்க போகிறது. அடுத்ததாக சிங்க பெண்ணே சீரியலில் ஆனந்தியின் அக்கா கல்யாணத்திற்காக அனைவரும் செவரக்கோட்டைக்கு வந்திருக்கிறார்கள்.
வந்த இடத்தில் துளசி கொடுத்த ஐடியாவின் படி ஆனந்தி கழுத்தில் அன்பு அதிரடியாக தாலி கட்ட போகிறார். அடுத்ததாக எதிர்நீச்சல் 2 சீரியலில் குணசேகரன், தர்ஷன் மற்றும் அன்புக்கரசிக்கு கல்யாணத்தை பண்ணி வைக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார். ஆனால் தர்ஷன் பார்கவிக் கழுத்தில் தாலி கட்டுவாரா அல்லது அன்புக்கரசி கழுத்தில் தாலி கட்டுவாரா என்று இந்த மாதம் தெரிந்து விடும்.
இதனைத் தொடர்ந்து ஆடுகளம் சீரியலில் சத்திய அர்ஜுன் கல்யாணமும் இந்த மாதத்திலேயே நடக்கப் போகிறது. நான்கு ஜோடிகளின் திருமணத்தை வைத்து இந்த மாதம் விறுவிறுப்பாக கொண்டு வருவதால் சன் டிவி சேனலின் டிஆர்பி ரேட்டிங் டாப்புக்கு போகப்போகிறது.