Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. தன்னுடைய அக்கா கல்யாணத்தை எந்த குறையும் இல்லாமல் நடத்தி முடிக்க முடிவெடுத்து ஆனந்தி செவரக்கோட்டையில் சந்தோஷமாக இருப்பது போல் நடித்துக் கொண்டிருக்கிறாள்.
அதே நேரத்தில் ஆனந்தியின் மொத்த கனவையும் கலைத்து கோகிலா திருமணத்தில் பெரிய பிரச்சனையை உருவாக்க சுயம்புலிங்கம் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான். இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ஆனந்தி மற்றும் குடும்பத்தினர் கோகிலா திருமண ஏற்பாடுகளை கோலாகலமாக செய்து வருகிறார்கள்.
சிங்கப்பெண்ணே சீரியல் ஹீரோ?
கோகிலாவுக்கும் மாப்பிள்ளை ரொம்ப பிடித்து போனது போல் ஒரு சில காட்சிகள் காட்டப்படுகிறது. அக்கா சந்தோஷமாக இருப்பதை பார்த்து ஆனந்தியும் கொண்டாட்டத்தில் இருக்கிறாள். அதே நேரத்தில் ஆனந்திக்கு அவ்வப்போது வாந்தி வருவது போலவும் காட்டப்படுகிறது.
மேலும் சுயம்புலிங்கம் தன்னுடைய ஆட்களோடு சேர்ந்து கொண்டு கோகிலா திருமணத்தில் பிரச்சனை பண்ண திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறான். எப்படியோ இந்த சிக்கலில் இருந்து ஆனந்தியை மீட்டெடுக்க செவரக்கோட்டைக்கு மகேஷ் அல்லது அன்பு தான் வரவேண்டும்.
சிங்க பெண்ணே சீரியலை பொறுத்த வரைக்கும் ஆனந்தியை யார் திருமணம் செய்து கொள்கிறார்களோ அவர்தான் சிங்க பெண்ணே சீரியலின் ஹீரோ என்ற நிலைமை தான் இப்போ வரைக்கும்.
ஒருவேளை கோகிலா கல்யாணத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருப்பது பிரச்சனையாக மாறி அதே நேரத்தில் இந்த கர்ப்பத்திற்கு தான் தான் காரணம் என நிலையில் இருக்கும் மகேஷ் வந்து ஆனந்தியை திருமணம் செய்து கொண்டால் மகேஷ் தான் சீரியலின் ஹீரோ.
அல்லது ஆனந்தியை சுற்றி நடக்கும் மர்மங்களை கண்டுபிடித்து அவளுடைய சொந்த ஊருக்கு வந்து நடந்த எல்லா உண்மையையும் சொல்லி அன்பு, ஆனந்தியை திருமணம் செய்து கொண்டால் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி அன்பு தான் ஹீரோ.
இப்படி இருக்கும் பட்சத்தில் ஆனந்தியின் சொந்த ஊருக்கு வரும் சிங்க பெண்ணே சீரியல் ஹீரோ யார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.