Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி கழுத்தில் அன்பு தாலி கட்டப் போகிறானா அல்லது மகேஷ் தாலி கட்டப் போகிறானா என்ற எதிர்பார்ப்புதான் நேயர்களுக்கு இருந்தது.
ஆனால் மூன்றாவது நபர் உள்ளே நுழைந்து மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வழியாக விடிஞ்சா கோகிலாவின் திருமணம் அவ்வளவுதான் அன்பும் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டி விடுவான் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது.
புதிய திருப்பத்துடன் சிங்கப்பெண்ணே
ஆனால் திடீரென கோகிலாவை சுயம்புலிங்கம் கடத்தி விடுகிறான். கோகிலாவுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றால் நீ என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஆனந்தியை மிரட்டுகிறான். ஆனந்தியும் யாரிடமும் சொல்லாமல் சுயம்பு லிங்கத்தை தேடி போகிறாள்.
எப்படியும் ரெஜினா மற்றும் சௌந்தர்யா மூலம் அன்பு இதை தெரிந்து கொள்வான். சுயம்பு லிங்கத்தை அடித்து வம்சம் செய்து விட்டு ஆனந்தி கழுத்தில் அந்த இடத்திலேயே தாலி கட்ட அதிக வாய்ப்பு இருக்கிறது, இந்த எபிசோடுகளில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்