Serial: இல்லத்தரசிகளுக்கு மிகவும் பொழுதுபோக்கான ஒரு விஷயம் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதுதான். அதனால் காலையிலிருந்து இரவு வரை சீரியல்களை போட்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்யும் வகையில் சில சேனல்கள் போட்டி போட்டு நாடகங்களை கொடுத்து வருகிறார்கள்.
அதில் சில சீரியல்கள் மக்களுக்கு பிடிக்காமல் போய்விட்டாலும் மற்ற சீரியல்களின் டிஆர்பி வைத்து அதிக புள்ளிகள் பெற்று விடுவார்கள். ஆனால் சில சீரியல்கள் நன்றாக இருந்தும் அதை சில காரணங்களுக்காக முடிக்கும் விதமாக அவசரமாக கொண்டு வந்த நேரத்திலே முடித்துவிடுவார்கள்.
அப்படித்தான் இப்பொழுது ஒரு சீரியல் ஆரம்பித்து நான்கு மாதத்திலேயே முடிவுக்கு வருகிறது. அதாவது கலைஞர் தொலைக்காட்சி சேனலில் கௌரி மற்றும் மீனாட்சி சுந்தரம் ஆகிய இரு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை தவிர சன் டிவியில் ஏற்கனவே ஒளிபரப்பாகி ஹிட்டான நாதஸ்வரம் சீரியலை மறுஒளிபரப்பு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது கலைஞர் சேனலில் மீனாட்சி சுந்தரம் சீரியல்தான் மக்கள் விரும்பு பார்க்கும் ஒரு ஃபேவரிட் சீரியலாக இருக்கிறது. இதில் எஸ்விசேகர் மற்றும் விஜய் டிவி கதாநாயகி ஷோபனா நடித்து வருகிறார். எதிர்பாராத விதமாக எஸ்விசேகர், மீனாட்சி கழுத்தில் தாலி கட்டி விடுவதால் 40 வயசு வித்தியாசத்தில் எஸ்வி சேகருக்கு மனைவியாக மீனாட்சி வாழும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.
இதனால் கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளான எஸ்விசேகர் பேரப்பிள்ளைகள் வந்த பிறகு எனக்கு இப்படி ஒரு பேச்சு தேவை இல்லை என்று தாலி பெருக்கு பங்க்ஷன் அன்று மீனாட்சிக்கு விவாகரத்து கொடுத்து விடுவதற்கு தயாராக இருக்கிறார். இதனால் மீனாட்சி எடுக்கப்போகும் முடிவு என்னவாக இருக்கும் என்று கேள்விக்குறியுடன் இருக்கிறது.
அவர் சொல்லப்போகும் பதில் தான் கிளைமாக்ஸ் காட்சியாகவும் அமையப்போகிறது. அந்த வகையில் கிளைமாக்ஸ் காட்சி வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி கொண்டுவரப்பட்டு மீனாட்சி சுந்தரம் என்ற சீரியலுக்கு சுபம் போட்டு விடுகிறார்கள்.