ஐஸ்வர்யா டிவோர்ஸ் கேஸ் மகா அப்பா தொழில் பிரச்சினை இதையெல்லாம் தொடர்ந்து சூர்யா வேலை தேட செல்லும் போது கையில் பணம் இல்லை என்ன செய்யலாம் என யோசிக்கும் சமயத்தில் கோடீஸ்வரி, ஐஸ்வர்யா file இல், மகா அப்பா pant pocket -லிலும் சூர்யாவுக்கு தெரியாமல் பணத்தை வைக்கிறார்கள்.
அந்த நேரம் மகா சூரியாவிடம் இன்னும் கிளம்பலையா என கேட்டவுடன் பணம் வேணும்னு சூர்யா சொல்ல நான் அப்பவே Transfer பண்ணிட்டேன் சொல்கிறாள். சூர்யா உடனே கிளம்பவும் பைலை இல் இருந்து பணம் கீழே விழவும் சூர்யா மகாவிடம் உங்க வீட்ல என் மேல் ரொம்ப அக்கறையா இருக்காங்க இதற்கு நான் என்ன கைமாறு செய்ய போறேன்னு தெரியல என பீல் பண்ணுகிறான்.
தொலைந்த நம்பிக்கையை மீட்டெடுக்க சூர்யாவின் புதிய பிசினஸ் வழி
சூர்யா பொம்மை பிசினஸ் விஷயமா ஒவ்வொரு கம்பெனியாக சென்று மார்க்கெட்டிங் செய்கிறார். ஆனால் கம்பெனிக்காரங்க அவனிடம் ஓகே சொல்லிட்டு பின்னாடி அவனை Insult செய்கிறார்கள். இதை தெரிந்த சூர்யா ரொம்ப வருத்தப்படுகிறார்.
ஐஸ்வர்யா நாம ஏன் வேலை தேடனும். பிசினஸ் பண்ணலாம் என சொல்கிறாள். அதற்கு மகா பிசினஸ் செய்ய Investment வேண்டும் என சொல்கிறாள். சூர்யா தூங்காம இருப்பதை பார்த்து மகா நீங்க என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்கிறாள்.
தசரதன் மாமா என்கிட்ட மண்பாண்டங்கள் செய்கிற தொழில் நாங்க முழுசா இறங்கி தோற்று போய் இருக்கிறோம். ஒன்னும் தெரியாத நீங்க என்ன செய்ய போறீங்க கேட்டாரு, இது எனக்கு பெரிய சவாலா இருக்கு, அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன் என்று சூர்யா சொல்கிறான்.
மறுநாள் காலையில் சூர்யா வீட்டில் உள்ளவர்களை அழைத்து மாமா என்கிட்ட பொம்மை பிசினஸ் எப்படியாவது உங்களால பெரிய லெவலுக்கு கொண்டு வர முடியும் நீங்க ஏதாவது பண்ணுங்க னு சொன்னாரு. அதனால் எனக்கு ஒரு ஐடியா வந்திருக்கு என சொல்கிறான்.
மண்பாண்ட பொருளையெல்லாம் Foriegn-ல் உள்ள இந்திய மக்கள் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க. அதனால நம்ம பொருளை Foreign லெவல் கு கொண்டு போக போகிறோம் என்று சொல்கிறான்.