Yuvan: இசை உலகில் தந்தை மகன் இருவரின் பயணமும் எப்போதும் சுவாரஸ்யமானதே. இளையராஜாவின் காப்புரிமை கோரிக்கைகள் ஒரு பக்கம், மகன் யுவனின் வெளிப்படையான ஒப்புதல்கள் இன்னொரு பக்கம். இந்த விவாதம் தற்போது திரையுலகில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
என் முதல் பாடல், என் அப்பாவின் முதல் பாடலிலிருந்தே வந்தது” என யுவன் கூறியுள்ளார். அதில் உள்ள “தா ன ன னா” என்ற நான்கு நோட் அவருக்கு ரொம்ப பிடித்ததாம். அதையடுத்து பல பாடல்களில் அதே நோட்டை அடிப்படையாகக் கொண்டு இசை அமைத்துள்ளார்.
அப்பாவின் பாடலை சுட்ட கதை
2007ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை 600028’ திரைப்படத்தின் “யாரோ யாருக்குள்” பாடல், “தென்றல் வந்து தீண்டும் போது” பாடலிலிருந்து எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டு வெளியான ‘கோவா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “இதுவரை இல்லாத உணர்வு இது” என்ற பாடல், இளையராஜாவின் “ஏதோ மோகம் ஏதோ ராகம்” பாடலிலிருந்து மெட்டு எடுத்ததாக யுவன்ஷங்கர் ராஜா கூறியுள்ளார்.
“சுடுறது தெரியாம சுடணும்.. அது தான் ஹைலைட்!” என்று யுவன் சிரித்தபடி பேசியுள்ளார். இது, அவர் தந்தையின் இசையை மதித்து அதை தன் பாணியில் மாற்றியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இசை பாசத்துல தந்தையை தொடர்ந்து பயணிக்கும் யுவன்… அந்த மெட்டுகளை தனக்கே உரிய ஸ்டைலில் மறுபடி கொண்டு வந்தார். சுட்றதுலயும் ஸ்டைல் இருக்கணும் அப்படின்னு செயல்பாட்டில் காட்டிவிட்டார்.