Vijay : என்னதான் நம்ம ரஜினிதான் பெரிய ஸ்டார் எங்குமே ரஜினி ரசிகர்கள்தன அப்படி இப்படினு பெருமை பேசுனாலும். இது எல்லாத்துக்கும் விதிவிலக்கு கேரளா மாநிலம். இங்கு விஜய் ரசிகர்கள்தான் அதிகம். ரசிகர்கள் ஓகே ஆனால் நாங்கள் விஜய் படத்தை மட்டும்தான் அதிகமாக பார்ப்போம் என நிரூபித்து காட்டிருக்கிறார்கள்.
வசூலில் தொடர்ந்து விஜய் படத்தை முன்னிலையில் வைத்துருக்கிறார்கள் கேரளா ரசிகர்கள். இந்தியா எங்குமே கூலி படத்தின் ஹைப் அதிகரித்து கொண்டே இருக்கிறது, அனைத்திலும் கூலி முன்னிலையில் இருக்கிறது.
இது என் ஏரியா ரஜினி சார்..
ஆனால் கேரளாவில் மட்டும் கூலி ஹைப் அவ்வளவாக இல்லை. கேரளா ரசிகர்களில் விஜய் ரசிகர்கள் தான் அதிகம் என்பதை நிரூபித்துகொண்டே இருக்கிறார்கள். தற்போது விஜய் அரசியலில் இறங்கியபோது கூட கேரளா ரசிகர்களிடம் இருந்து அமோகமான வரவேற்பு கிடைத்தது. தற்போது கேரளா டிக்கெட் புக்கிங்கில் தொடர்ந்து வசூலில் முன்னிலையில் இருக்க கூடியது விஜய் படங்கள்தான் அந்த வரிசையாய் பார்க்கலாம்.
லியோ : இந்த லியோ படமானது முதல் நாள் டிக்கெட் புக்கிங்கில், 12 கோடி வசூலை பெற்று முன்னணியில் உள்ளது.
பீஸ்ட் : விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படம் 6.65 கோடி வசூலை பெற்று இரண்டாவது இடத்தில உள்ளது.
சர்க்கார் : சர்க்கார் படம் 6.1 கோடி வசூலை பெற்று 3ம் இடத்தில உள்ளது.
ஜெயிலர்: ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படம் 5.85 கோடிக்கு வசூலை பெற்று தந்து நான்காவது இடத்தில் உள்ளது.
தி கோட் : விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பேட்ட கோட் படம் 5.80 கோடி வசூலை பெற்று தந்து 5ம் இடத்தில உள்ளது.
கூலி : நாடெங்கும் ஹைப் ஏற்றிய கூலி 5.35 கோடி வசூலை பெற்று 6ஆவது இடத்தில் உள்ளது.
விக்ரம் : எங்குமே கல்லா கட்டிய விக்ரம். கேரளாவில் 5.12 கோடி வசூலை பெற்று 7ஆவது இடத்தில உள்ளது.
பிகில் : அடுத்ததாக விஜய் நடித்த பைக்ல படம் 4.8 கோடிக்கு டிக்கெட் விற்று 8ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மெர்சல் : அடுத்தும் விஜய் நடித்த மெர்சல் படம்தான் 4.6 கோடிக்கு வசூலை பெற்று 9ஆவது இடத்தை பெற்றுள்ளது.
வாரிசு : 4.35 கோடிக்கு வசூல் செய்து விஐ நடித்த வாரிசு படம் 10ஆவது இடத்தை தக்கவைத்துள்ளது.
இவ்வாறு கேரளா விஜய் ரசிகர்களின் கோட்டை என்று தொடர்ந்து விஜய் படத்தை வெற்றி படமாக மாற்றி, சாதனையை படைத்துள்ளது கேரளா. இது என் ஏரியா ரஜினி சார் என சும்மா கெத்து காட்டியுள்ளார் விஜய். ஊரே கூலியை கொண்டாடினாலும் நாங்கள் விஜயைத்தான் கொண்டாடுவோம் என கூறாமல் கூறியுள்ளார்கள் கேரளா ரசிகர்கள்.