Indiyan-3 : நடிகர் கமல்ஹாசன் அவர்கள் திரையுலகில் சிறு வயதிலிருந்து கடினமாக உழைத்து தற்போது உச்சத்தில் இருக்கக்கூடிய ஒரு நடிகர். இவர் இறுதியாக கொடுத்த இரண்டு படமும் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
அதனால் இவர் சிறிதளவு கூட மனம் தளராமல் அடுத்தடுத்து உள்ள வேலைகளை சரியான முறையில் செய்து வருகிறார். தற்போது இந்தியன்-3 படம் இயக்குனர் சங்கர் அவர்களால் இயக்கப்பட்டு, கமல்ஹாசன் அவர்கள் அதில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை “லைக்கா ப்ரொடக்ஷன்” மற்றும் “ரெட் ஜெயன்ட் மூவிஸ்” இணைந்து தயாரித்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் தற்போது படக்காட்சிகள் முடிந்து திரைக்கு வெளிவரவிற்கும் நிலைக்கு தயாராக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியன்-3க்கு கமல், ஷங்கர் சம்பளம் வாங்கலையா..
இந்த நிலையில் இந்தியன்-3 படத்திற்காக கமல்ஹாசன் மற்றும் சங்கர் அவர்கள் சம்பளம் வாங்கவில்லை என்று தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் இந்தியன் திரைப்படத்திற்காக இவர்கள் இருவருமே சம்பளம் பெற்றுள்ளனர் என்றும் , இவர்கள் சொல்வது அப்பட்டமான பொய் என்றும் திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
ஏற்கனவே எடுத்த படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து ரிலீஸ் பண்ண போறாங்க அப்படின்னு செய்தியும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுக்கு கமல்ஹாசன் அவர்கள் பணம் கேட்டதுக்காகத்தான். நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் லைக்காவிற்காக சப்போர்ட் செய்து கமல்ஹாசன் அவர்களிடம் பேசியுள்ளார்.
பிறகு ரஜினிகாந்த் அவர்கள் பேசியதால் கமல்ஹாசன் அவர்கள் பணம் ஏதும் பெற்றுக் கொள்ளாமல் இலவசமாக ரிலீஸ் பண்ண சொன்னாராம். இந்த மாதிரியான தகவல்கள் கசிந்து வருகின்றன. எது எப்படியோ இந்தியன்-3 படம் கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. இதற்கான அப்டேட்டை விரைவில் நாம் எதிர்பார்க்கலாம்.