Cinema : ஒரு படம் தியேட்டரில் நல்லா ஓட வேண்டும் என்றால் அது இயக்குனர் கையில் தான் இருக்கிறது. சினிமாவை எடுத்துக் கொண்டால் தற்போது ஹீரோக்கள், ஹீரோயின்களை விட இயக்குனர்களுக்கு தான் அதிக மவுஸ்.
ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றால் நடிகர்கள் இருந்தால் மட்டும் பத்தாது, அதற்கு தேவையான கற்பனைத் திறன் மற்றும் சரியான வரையிடுதல் இருந்தால் மட்டுமே சினிமாவில் ஒரு நல்ல திரைப்படத்தை இயக்குனரால் கொடுக்க முடியும். சினிமாவில் இதுவரையிலும் ஒரு படத்திலும் கூட தோல்வியே கொடுக்காத 5 இயக்குனர்களைப் பற்றி பார்ப்போம்.
ராஜமவுலி :
S.S. ராஜமவுலி என்றால் இந்த உலகமே அறிந்திருக்கும் பெயர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தனது திரைப்படங்களை அச்சு பிசறாமல் ஹிட் கொடுத்தவர். 2001-இல் Student No.1 என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹிட் கொடுத்து இன்று இந்திய சினிமாவின் சர்வதேச முகமாக உயர்ந்துள்ளார். இவ்வளவு வருட சினிமா வாழ்க்கையில் இவரின் ஒரு படம் கூட ப்ளாப் இல்லை.
பிரஷாந்த் நீல் :
இந்தியா முழுவதிலும் அறியப்படும் ஒரு பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல். 2018-இல் KGF திரைப்படத்தின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைத்தார். இவரது நாலு திரைப்படங்களுமே ஹிட் அடித்தது. இதுவரை இயக்கிய திரைப்படத்தில் எல்லாமே சூப்பர் ஹிட். இவரின் ஒரு திரைப்படம் கூட தோற்கவில்லை.
ராஜ்குமார் ஹிரானி :
இவர் ஹிந்தி பிரபல இயக்குனர் ஆவார். 2003-இல் முன்னாபாய் M.B.B.S என்று திரைப்படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இதுவரைக்கும் இவர் 6 டாப் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். ஹிந்தி சினிமாவை பொருத்தவரைக்கும் இவரது படங்கள் எதுவும் இன்னும் தோல்வி பெறாத ஒன்று.
லோகேஷ் கனகராஜ் :
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். தற்போது தலைவர் சூப்பர் ஸ்டாரின் கூலி திரைப்படத்தை இயக்கியுள்ளார். மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் லியோ இவர் இயக்கிய ஐந்து படமுமே ஹிட் தான். இவர் இயக்கிய எந்த திரைப்படமும் தோல்வியில் முடியவில்லை.
அட்லீ :
தமிழ் பிரபல இயக்குனர்களில் ஒருவரான அட்லீ 2013-இல் ராஜா ராணி என்ற ஹிட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தெரி, மெர்சல், பிகில் போன்ற ஹிட் படங்களை கொடுத்தார். இவர் இயக்கிய எந்த திரைப்படமும் ஃப்ளாப் ஆகவில்லை.