Seeman : 1990-களில் சினிமா இயக்குனராக அறிமுகமாகி இன்று அரசியலில் குதித்து மக்களுக்கு சேவை செய்யத் துடிக்கும் சீமான்.
தற்போது சீமான் ஒரு நடிகரைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு பேசியது வைரலாகி வருகிறது.
ரஜினி, அஜித், விஜய் இந்த ஹீரோக்களை பற்றி தான் தற்போது அதிகம் விமர்சனமும் வருகிறது, மக்களிடையே கருத்துக்களும் அதிகம் எழுந்து வருகிறது. ரஜினி தனது ஸ்டைலான தோற்றத்தை வைத்து திரையில் ரசிகர்களை மயக்கி விடுகிறார். அஜித் தனது அமைதியான தோற்றத்தை வைத்து ரசிகர்களை அதிகம் கூட்டி வருகிறார்.
விஜய் அரசியலில் குதித்துள்ளார் என்பதுதான் இப்போது ரசிகர்களின் அதிக பேச்சாக இருக்கிறது. தமிழ்நாட்டில் விஜய்க்கு தொண்டர்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றனர். இதைப் பார்க்கையில் 2026-இல் முதலமைச்சர் விஜய் தான் போல, அந்த அளவு விஜய் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளார்.
ரஜினி,அஜித், விஜய் இவர்களை எல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு தனுஷை உயர்த்திப் பேசி இருக்கிறார் சீமான்.
சீமான் பேசியதாவது,
இந்த தலைமுறைக்கு தனுஷ் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருப்பது மிகப்பெரிய விஷயம். ஒரு தனி மனிதனாய் சினிமாவில் இருந்து கதை எழுதுவது, இயக்குவது, பாடுவது, நடிப்பது என எல்லா திறமையும் கொண்டவர் தனுஷ் தான், இதை நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு- சீமானின் பேச்சு.