இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்.. சூரியின் மாமன் எதில் தெரியுமா.? – Cinemapettai

Tamil Cinema News

OTT Movies : ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் எக்கச்சக்க படங்கள் வெளியாகும் நிலையில் இந்த வாரமும் வரிசைகட்டி நிற்கிறது. தமிழில் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூரியின் மாமன் படம் வெளியாக உள்ளது. வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

ஆசாதி படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தெலுங்கில் சாய் ஸ்ரீராம் சங்கர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் வெளியான Okka padhakkam prakaram படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மேலும் ஜியோ ஹாட் ஸ்டாரில் The Gilded Age, Iron Heart, FX, Belleza Fatal, Mistry, The Brutalist ஆகிய படங்கள் வெளியாகிறது. ஜீ 5 ஓடிடி தளத்தில் Viraatapalem என்ற தெலுங்கு படம் வெளியாகிறது.

ஜூன் கடைசி வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

Train wreck, Pintu Pintu Surga, Squid Game, ஆகிய படங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து அமேசான் வீடியோவில் I Don’t Understand You, Pavements, Escape From the 21st Century,The Ritual ஆகிய படங்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது.

இதைத்தொடர்ந்து MUBI ஓடிடி தளத்தில் Pavements படம் வெளியாகிறது. Lions get play என்ற ஓடிடி தளத்தில் cleaner படமும், HBO Max என்ற தளத்தில் My Mom Jayne மற்றும் The Day the Earth Blew up ஆகிய படங்கள் வெளியாகிறது.

இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு பல படங்கள் வெளியாகிறது. ஆனால் தமிழில் மாமன் மட்டும் தான் வெளியாவது சற்று வருத்தமாக இருக்கலாம். மேலும் மாமன் படம் தியேட்டரிலேயே கிட்டத்தட்ட 35 கோடியை தாண்டி வசூல் செய்து ஓடிடியில் தரை இறங்குகிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.