July 2nd Week OTP Release Movies : ஒவ்வொரு வாரமும் தியேட்டரில் என்ன படங்கள் வெளியாகிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடம் இப்போது குறைந்துவிட்டது. ஏனென்றால் ஓடிடியில் அதிக படங்கள் வெளியாவதால் அதைப் பார்க்க தான் கவனம் செலுத்தி வருகிறார்கள். அவ்வாறு ஜூலை இரண்டாவது வாரம் ஓடிடியில் புது வரவாக என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம்.
தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படம் வருகின்ற ஜூலை 18ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகிறது. தியேட்டரில் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியிடுகின்றனர்.
பருத்திவீரன் பட சரவணன் ஹீரோவாக களமிறங்கி இருக்கும் சட்டமும் நீதியும் என்ற வெப் தொடர் ஜி5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அதேபோல் பைரவம் என்ற தெலுங்கு படமும் ஜி5-ல் வர இருக்கிறது. அஸ்திரா என்ற மலையாள படம் மனோரமா மேக்ஸில் வெளியாகிறது.
ஜூலை இரண்டாவது வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்
மேலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் How To Train Your Dragon, M3 gaan, Bride Hard, Finally Dawn ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் Kung Fu panda 4, Dragon Ball Z, coyotl, Amy Bradley Missing, Untamed, LILIM, wall to wall, delightfully deceitful, To killa money ஆகியவை ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
மேலும் இதே தளத்தில் ஜூலை 19ஆம் தேதி ISS, The Assessment ஆகியவை வெளியாகிறது. ஆகையால் ரசிகர்கள் எதிர்பார்த்த பல படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகுவதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை வீட்டிலேயே படங்களை பார்த்த செலவிடலாம்.