Coolie : இந்த வருடம் பெரிதும் எதிர்பார்த்த படங்கள் ஆகஸ்ட் மாதம் இந்த வாரம் தான் வெளியாக இருக்கிறது. அதாவது பெரிய பட்ஜெட் படங்களான கூலி மற்றும் வார் 2 ஆகிய இரண்டு படங்களும் இந்த வாரம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி கூட்டணியில் உருவாகி இருக்கும் கூலி படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. அதுவும் ப்ரீ புக்கிங்கில் வசூல் வேட்டை ஆடி வருகிறது. இந்த சூழலில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கூலி படம் வெளியாகிறது. இந்த படத்திற்கு போட்டியாக வெளியாகிறது வார் 2 படம்.
அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர், கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருக்கின்றனர். பாலிவுட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு சற்று கூடுதலாக இருக்கிறது.
ஆகஸ்ட் இரண்டாவது வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்கள்
அடுத்ததாக ஓடிடியில் சில படங்கள் இந்த வாரம் வர இருக்கிறது. ஜீ5 ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் உருவான ஜே எஸ் கே படம் வெளியாகிறது. அடுத்தப்படியாக ஜான் ஆபிரகாம் நடிப்பில் உருவான பாலிவுட் படமான தெஹ்ரான படமும் ஜீ5ல் வெளியாகிறது.
மேலும் பாலிவுட்டில் சாரே ஜஹான் சே அச்சா என்ற படம் நெட்பிளிக்ஸில் ஆகஸ்ட் 13 வெளியாகிறது. அமேசான் பிரைம் வீடியோவில் பாலிவுட் சீரியஸான பட்டர்பிளை சீசன் 1 ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி அப்பார்ட்மெண்ட் தி வுமன் இன் தி டிகேயிங் ஹவுஸ் சீரிஸ் வெளியாகிறது.
ஜியோ ஹாட் ஸ்டாரில் லவன்சர், மன் பசந்த் கி ஷாதி ஆகிய வெப் சீரிஸுகள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது. ஆகையால் இந்த வாரம் தொடர் விடுமுறையை கொண்டாட ரசிகர்களுக்கு விருந்தாக படங்களும் வெப்சீரிஸுகளும் வர உள்ளது.