Zee 5 : இந்த வாரம் தியேட்டரில் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் ஓடிடியில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில படங்கள் வந்திருக்கிறது. குறிப்பாக ஜி5 ஓடிடி தளத்தில் எதிர்பார்த்த இரண்டு படங்கள் வெளியாக இருக்கிறது.
மாமன்
சூரி நடிப்பில் குடும்ப செண்டிமெண்ட் படமாக வெளியாகி இருந்தது மாமன் படம். தாய் மாமன் உறவை பற்றி உணர்ச்சி பூர்வமாக வெளியான இந்த படம் தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆகஸ்ட் எட்டாம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் மாமன் படம் வெளியாகிறது.
Mothevari Love Story
தெலுங்கில் உருவான இந்த சீரிஸ் காதல் மற்றும் காமெடி கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது.
Hebbuli Cut
கன்னட மொழியில் உருவான இப்படம் ஜூலை நான்காம் தேதி தியேட்டரில் வெளியானது. புனித் ஷெட்டி நடிப்பில் உருவான இந்த படம் ஆகஸ்ட் 8ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
Freaky Tales
இந்த படம் ஆங்கில மொழியில் உருவான நிலையில் HBO MAX என்ற தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது. இதைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
ஆகையால் இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் இந்த படங்களை பார்த்து கண்டிப்பாக நேரத்தை செலவிடலாம். மேலும் அடுத்த வாரம் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.