இந்த வார ஓடிடியில் கொடி கட்டி பறக்கும் 5 தமிழ் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க – Cinemapettai

Tamil Cinema News

தியேட்டரில் வெளியாகும் படங்கள் விரைவில் ஓடிடியில் வந்துவிடுவதால், திரையரங்குகளுக்கு செல்லும் ரசிகர்கள் குறைந்துள்ளனர். இதனால் ஓடிடி பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வார ஓடிடியில் அதிக வீயூஸ் அள்ளிய படங்களை பார்க்கலாம்.

ஜூலை 14 முதல் 20ஆம் தேதி வரை, ஓடிடி தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஐந்தாம் இடத்தில் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகும் ஆங்கில திரைப்படமான ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட் (Heads of State) உள்ளது (15 லட்சம் வியூஸ்). நான்காம் இடத்தில் அஜய் தேவ்கன் மற்றும் ரிதேஷ் தேஷ்முக் நடித்த ரெய்டு 2 (Raid 2) நெட்பிளிக்ஸில் 17 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.

மூன்றாம் இடத்தில், நெட்பிளிக்ஸில் வெளியாகிய கமல் ஹாசன் நடித்த தக் லைஃப் (Thug Life) உள்ளது (20 லட்சம் வியூஸ்). இரண்டாம் இடத்தை தனுஷ் நடித்த குபேரா (Kuberan) பிடித்துள்ளது. இப்படம் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி 25 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

முதலிடத்தை நெட்பிளிக்ஸில் வெளியாகிய இந்திப் திரைப்படமான ஆப் ஜெய்ஸே கொய் (Ap Jaise Koi) பிடித்துள்ளது. இப்படம் 37 லட்சம் பார்வைகளை பெற்று கடந்த வாரத்தில் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக உள்ளது.

அதிக வியூஸ்களை பெற்ற வெப் தொடர்

வெப் தொடர்களில், ஐந்தாம் இடத்தில் ஸ்குவிட் கேம் சீசன் 3 (Squid Game Season 3) உள்ளது (20 லட்சம் வியூஸ், நெட்பிளிக்ஸ்). நான்காம் இடத்தில் தி கிரேட் இந்தியன் கபில் ஷோ (The Great Indian Kapil Show) சீசன் 3, கபில் சர்மா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி உள்ளது (25 லட்சம் பார்வைகள்). மூன்றாம் இடத்தில் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகும் பஞ்சாயத் சீசன் 4 (Panchayat Season 4), ஜிதேந்திர குமார் நடித்தது 26 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தில், அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகும் மிட்டி ஏக் நய் பெய்சான் (Mitti Ek Nayi Pehchaan) எனும் ஹிந்தி வெப் தொடர் உள்ளது (32 லட்சம் பார்வைகள்). முதலிடத்தில் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகும் ஸ்பெஷல் ஓபிஎஸ் சீசன் 2 (Special OPS Season 2) 62 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.