இந்த வார ஓடிடியில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 20 படங்கள்.. VJS உடன் மோதும் வடிவேலு – Cinemapettai

Tamil Cinema News

ஓடிடி உலகம் புதிய படங்களும் வித்தியாசமான வெப் சீரிஸ்களும் கொண்டு ரசிகர்களை கவர தயாராக இருக்கிறது. ஆக்‌ஷன், ரொமான்ஸ், த்ரில்லர் போன்ற படங்களை தவற விடாமல் ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்கள் ரசிகர்களுக்கு nonstop எண்டர்டெயின்மென்ட் தருகின்றன.

ஆகஸ்ட் 19ம் தேதி Mission Impossible: The Final Reckoning ஆங்கிலம் + பல மொழிகளில் பிரைம் வீடியோ Rent ல் வந்திருக்கிறது. அதோடு The Bad Guys, Elio, Familiar Touch, House on Eden ஆகிய ஆங்கில படங்களும் அதே நாளில் பிரைம் வீடியோ Rent ஆப்ஷனில் கிடைக்கின்றன.

ஆகஸ்ட் 20-ம் தேதி ஸ்ட்ரீமிங்கில் காதலுக்கும் சஸ்பென்ஸுக்கும் இடம் உண்டு. The Map That Leads To You ஆங்கிலம் + பல மொழிகள் பிரைம் வீடியோ-வில் வருகிறது. அதோடு பிரேசிலியன் சீரிஸ் Rivers Of Fate நெட்ஃபிளிக்ஸ்-ல் ஸ்ட்ரீமிங் ஆரம்பமாகிறது. வெளிநாட்டு கதைகள், அங்கேயுள்ள கலாசாரங்களோடு, பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவம் தரப்போகிறது.

ஆகஸ்ட் 21ஆம் தேதி இன்னும் அதிக சுவாரஸ்யம் The Alto Knights ஜியோ ஹாட்ஸ்டார் ல் ஆங்கிலத்தில் வெளியாகிறது. அதோடு நெட்ஃபிளிக்ஸ்-ல் பிரிட்டிஷ் சீரிஸ் Hostage, ஜெர்மன் படம் Fall For Me, அதிரடி நிறைந்த Welcome To Sudden Deadth, One Hit Wonder, தாய்லாந்து படம் Gold Rush Gang எல்லாம் ஒரே நாளில் வெளியாகிறது.

ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழ் ரசிகர்களுக்கு பெரும் திருவிழா தலைவன் தலைவி தமிழ் + பல மொழிகள் பிரைம் வீடியோ-வில் வருகிறது. அதே நாளில் மாரீசன் (தமிழ் + பல மொழிகள்) நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியாகிறது. தெலுங்கில் Kothapallilo Okappudu ஆஹா வீடியோ-வில் வருகிறது.

அதே நாளில் ஹாலிவுட் ரசிகர்களுக்காக F1 The Movie பிரைம் வீடியோ ரெண்ட் ஆப்ஷனில் வெளியாகிறது. அதோடு PeaceMaker Season 2 ஜியோ ஹாட்ஸ்டார்-இல், Hot Milk ம்யூபி-ல், Aema (கொரியன் சீரிஸ்) நெட்ஃபிளிக்ஸ்-ல், Abandoned Man துருக்கிய படம் நெட்ஃபிளிக்ஸ்-ல், Night of the Zoopocalypse பீக்காக்-ல் என பத்து படங்களும் சீரிஸ்களும் ரசிகர்களை கவர போகின்றன.

ஆகஸ்ட் 23ம் தேதி நெட்ஃபிளிக்ஸ்-ல் On Swift Horses எனும் ஆங்கில படம் வெளியாகிறது. தனித்துவமான கதைக்களத்துடன் வந்திருக்கும் இந்த படம் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 24-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ்-ல் The Killer எனும் ஆங்கில படம் வெளியிடப்படுகிறது. த்ரில்லர், ஆக்‌ஷன், எமோஷன் கலந்து வரும் இந்த படம், வார இறுதியில் பார்வையாளர்களை கவரும் வகையில் இருக்கும். இப்படியாக, ஒவ்வொரு நாளும் புதிய புதிய படங்களும் சீரிஸ்களும் வெளியாகி, ஓடிடி ரசிகர்களுக்கு விருந்தளிக்கிறது

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.