Gossip: அந்த சாக்லேட் பாய் நடிகர் இப்போது கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். எந்த அளவுக்கு நல்ல பையன் என்று பெயர் எடுத்திருந்தாரோ அது எல்லாம் இப்போது டோட்டல் டேமேஜ் ஆகிவிட்டது.
வளர்ந்த பிள்ளைகள் இருக்கும்போது ஏதேதோ காரணம் சொல்லி மனைவியை விட்டு இவர் பிரிந்துள்ளார். தனியாக இருந்தால் கூட பரவாயில்லை. புது காதலியுடன் அவர் ஆட்டம் போடுவது தான் இந்த விமர்சனத்திற்கு காரணம்.
நல்லா இருந்த குடும்பம் ஒரு பொண்ணால இப்படி ஆயிடுச்சு என ஆதங்கப்படாதவர்கள் இல்லை. அதே போல் நடிகரின் மனைவியை ஆரம்பத்தில் திட்டியவர்கள் எல்லாம் இப்போது அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.
நடிகரை வெறுப்பேற்றும் முன்னாள் மனைவி
இதுக்கு காரணம் நடிகர் இப்போது தன் தோழியுடன் வெளியிடும் போட்டோக்களும் வீடியோக்களும் தான். ஆரம்பத்தில் இரு தரப்பும் மாறி மாறி சோசியல் மீடியாவிலேயே சண்டை போட்டு வந்தார்கள்.
நடிகர் தன் மீது அனுதாபத்தை வரவைக்க குட்டிக்கரணம் போட்டார். ஆனால் இப்போது நடிகரின் முன்னாள் மனைவி தன் போக்கில் தன்னுடைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டார். தன் பிள்ளைகளுடன் அவர் இப்போது முழு நேரத்தை செலவிட்டு வருகிறாராம்.
கிடைக்கும் நேரத்தில் பிள்ளைகளுடன் வெளியே செல்வது டின்னர் ஆட்டம் பாட்டம் என அவருடைய லைஃப் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. நடிகரும் ஒரு பக்கம் தோழியுடன் ஜாலி டூர் அடித்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.