Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவின் விவாகரத்து சம்பந்தமாக பாக்கிய குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் கோர்ட்டுக்கு போகிறார்கள். போகும்பொழுது கோபி மற்றும் பாக்கியா ஒன்றாக இருந்து இனியவை பொக்கிஷமாக பாதுகாக்கும் படி பக்கத்தில் இருந்து அரவணைத்து நம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசி வருகிறார்கள்.
பிறகு கோர்ட்டுக்கு போனதும் ஒரு மாதம் கழித்து வாங்க என்று சொல்லிவிடுகிறார்கள். இதனால் இனிய அங்கு இருந்து கிளம்பும்பொழுது நித்தீஷ் இனியாவிடம் பிரச்சினை பண்ணினார். அதாவது இனியாவையும் ஆகாசையும் சேர்த்து வைத்து பேசி மோசமாக நடந்து கொண்டார். இதனால் கடுப்பான இனிய, நித்தீஷ் கணத்தில் பளார் என்று அறைந்து விடுகிறார்.
பிறகு நித்தேஷும் அடிக்க போன நிலையில் பாக்யா மற்றும் கோபி போய் தடுத்து நித்தேஷை திட்டியதால் அங்கு இருந்து நிதேஷ் கிளம்பி விடுகிறார். பிறகு எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று கோபி மற்றும் பாக்கியம் இனியாவிற்கு அட்வைஸ் பண்ணி வீட்டிற்கு கூட்டிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஒரே குடும்பமாக பாக்கியா கூட நின்று பொறுப்பாக நடந்து கொண்ட கோபியை பார்க்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது.
இதனைத் தொடர்ந்து இனியாவுக்கு வரும் பிரச்சனையை அடுத்தடுத்து கோபியும் பாக்கியாவும் ஒன்றாக இணைந்து சரி செய்து ஒரே குடும்பத்துடன் சந்தோஷமாக இருப்பது போல் கதை இறுதி அத்தியாயத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.