Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு சைக்கோ குடும்பத்திடம் மாட்டிக் கொண்டோம், அதிலிருந்து எப்படியாவது இனியவை காப்பாற்ற வேண்டும் என்று இருப்பவர்கள் போராடுகிறார்கள்.
இதற்கெல்லாம் மூல காரணமாக இருந்த கோபி, என்னுடைய அவசர புத்தியால்தான் என் மகளின் வாழ்க்கை இப்படி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பிளாக் மெயில் பண்ணி செண்டிமெண்ட் டிராமா போட்டு இனியவை கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கியதற்கு பாவம் என் மகள் இப்பொழுது அவஸ்தைப்படுகிறார் என்று கோபி ஒரு பக்கம் புலம்புகிறார்.
இன்னொரு பக்கம் என்னுடைய கல்யாண வாழ்க்கை தான் பாதியிலே முறிந்து போய்விட்டது என் மகளின் வாழ்க்கையாவது சந்தோசமாக இருக்க வேண்டும் என்று தான் எல்லாத்தையும் தியாகம் செய்து கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டேன். ஆனால் இப்பொழுது அந்த மகள் நிம்மதி இல்லாமல் தவிப்பதை பார்க்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது என்று பார்க்கியா புலம்புகிறார்.
இப்படி எல்லோருடைய வருத்தத்தையும் தாண்டி விவாகரத்துக்கு தயாரான இனியாவிற்கு சைக்கோ குடும்பத்தில் இருந்து பதிலடி கொடுத்திருக்கிறார்கள். அதாவது நிதேஷ் கோர்ட்டில் அப்ளை பண்ண விஷயம் என்னவென்றால் நான் இனி அவை காதலித்து தான் கல்யாணம் பண்ணினேன். ஆனால் கல்யாணத்துக்கு பிறகு இனியாவுக்கும் அவருடைய முன்னாள் காதலனுக்கும் தொடர்பு இருக்கிறது என்று இனியாவின் கேரக்டரை மோசமாக சொல்லி இருக்கிறார்.
ஆனாலும் அந்த விஷயத்தை எல்லாம் மறந்து நான் இனியாவை கொஞ்சம் கொஞ்சமாக திருத்தி சந்தோசமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தான் இப்பொழுது ஆசைப்படுகிறேன். அதனால் எனக்கு விவாகரத்தில் சம்மதம் இல்லை என்று நித்தேஷ் இனியா மீது மொத்த பழியையும் போட்டு விவாகரத்துக் கொடுக்க முடியாத அளவிற்கு செய்துவிட்டார்.
இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட கோபி, வீட்டில் வந்து சொல்லும் பொழுது இணையாகவும் அந்த லெட்டரை படித்து விடுகிறார். இதனால் மொத்த குடும்பமும் நிம்மதி இல்லாமல் தவிப்பதை பார்த்த இனியா சுதாகர் வீட்டிற்கு சென்று ஆவேசமாக பேசுகிறார். உடனே சுதாகர், இனியா பேசுவதை வீடியோ எடுத்து கோபிக்கு அனுப்பி உன் மகளுக்கு மனநிலை சரியில்லாமல் கத்திக் கொண்டிருக்கிறார்.
சீக்கிரமாக வந்து கூட்டிட்டு போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடு என்று கோபியிடம் சொல்லிவிடுகிறார். இதனால் கோவப்பட்ட கோபி சுதாகர் வீட்டிற்கு வந்து வாசலில் காத்துக் கொண்டிருக்கும் இனியவை கூட்டிட்டு போகிறார். பாவம் ஒரு பெண்ணுடைய வாழ்க்கை இப்படி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதை பார்க்கவே கஷ்டமாகத்தான் இருக்கிறது.
இதெல்லாம் வைத்து இறுதி அத்தியாயத்தில் ஒரு பெண்ணுடைய வாழ்க்கைக்கு நியாயம் கொடுக்கும் விதமாகவும் திருமண வாழ்க்கையில் இருந்து டார்ச்சர் அனுபவிக்கும் பெண்களுக்கு ஒரு பாடமாகவும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் கதை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் இந்த வாரத்துடன் சுபம் போடுவதற்கு தயாராகி விட்டார்கள்.