இனியா ரூபத்தில் வந்த பவதாரணி.. விஜய் டிவி நிகழ்ச்சியை டம்மியாக்கிய ஜீ தமிழ் – Cinemapettai

Tamil Cinema News

Vijay Tv: ரியாலிட்டி ஷோ என்றாலே மக்களின் திறமைகளை வெளிக்கொண்டுவந்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வாங்கிக் கொடுப்பதுதான். இதில் விஜய் டிவி தான் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது ஜீ தமிழ் சேனலும் போட்டி போட்டு மக்களின் திறமைகளுக்கு அங்கீகாரத்தை கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் ரியாலிட்டி ஷோ மூலம் திறமையுள்ள கலைஞர்கள் போட்டி போட்டு அவர்களுக்கான தனித்துவத்தை காட்டி வருகிறார்கள். அப்படி ஜீ தமிழில் வந்த ரியாலிட்டி ஷோ தான் டான்ஸ் ஷோ டான்ஸ், ஜோடி ஆர் யூ ரெடி, சரிகமப போன்ற நிகழ்ச்சிகள்.

எப்படி விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்களோ, அதே மாதிரி ஜீ தமிழில் ரியாலிட்டி ஷோவாக இருக்கும் சரிகமப நிகழ்ச்சிக்கும் அதிக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஆரம்பித்த சீசன் 5 நிகழ்ச்சிக்கான ஆடிசன் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இதில் பலரும் தன்னுடைய திறமையை காட்டி ஜெயிக்க வேண்டும் என்று ஆசைடன் அடி எடுத்து வைத்திருக்கிறார்கள். இதில் தேவயானியின் இளைய மகளாக இருக்கும் இனியாவும் கலந்து இருக்கிறார். அப்படி இனியா ஆடிஷனில் பாடிய பாடல் என்னவென்றால் மயில் போல பொண்ணு ஒன்னு பாடலை தான். இந்தப் பாடல் மறந்த பாடகி பவதாரணி பாடிய பாடல்.

அப்படி இந்த பாடலை இனியா பாடி கேட்கும் பொழுது பவதாரணி பாடுவது போலையே காதுக்கு இனிமையாக இருக்கிறது. எங்களுக்கு மீண்டும் ஒரு பவதாரணி கிடைத்துவிட்டார் என்று மக்கள் சந்தோஷமாக விமர்சனம் செய்து பார்த்து வருகிறார்கள். அத்துடன் இனியாவை தொடர்ந்து தேவயானியை பார்த்து நடுவர்கள் இன்ப அதிர்ச்சி ஆகிவிட்டார்கள்.

அதில் ஒரு நடுவர் நீங்கள் நினைத்தால் ஏதாவது ஒரு மியூசிக் டைரக்டர் இடம் நேரடியாகவே இனியாவிற்கு வாய்ப்பு கேட்டிருக்கலாமே, எதற்காக இந்த மேடையை நீங்கள் தேர்வு செய்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு தேவயானி சொன்ன பதில் இந்த மேடை எல்லோருக்கும் ஈசியாக கிடைக்காது.

என் மகளின் வெற்றி அவளுடைய சொந்த முயற்சியால் இருக்க வேண்டும் என்பது தான் எனக்கும் ஆசை, அவளுக்கும் அதுதான் பிடிக்கும். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் என் மகளை அழைத்து வந்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா மற்றும் பிரியங்காவின் பேச்சு தான் அதிகமாக இருக்கிறது மத்தபடி அதில் சொல்வதற்கு ஒன்னும் இல்லை என்று விமர்சனங்கள் போய்க் கொண்டிருக்கிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக தேவயானி விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு கூட்டிட்டு போகாமல் ஜீ தமிழ் சேனலை தேர்வு செய்திருக்கிறார்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.