Cinema : சினிமாவில் காமெடி செய்த வரும் நடிகர்களை நாம் காமெடியனாக தான் பார்த்திருப்போம். ஆனால் அவர்களுக்கும் ஒரு திறமை இருக்கிறது என்பது அவர்களது முன்காலத்தை எடுத்துப் பார்த்தால் தெரியும். அப்படி தங்களது திறமைகளை இயக்குனர்கள் முகமாக காண்பித்த 4 நடிகர்களை பற்றி பார்ப்போம்.
ரெட்..
2002ல் தல அஜித்தின் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் ஓர் இடத்தைப் பிடித்தது. அதுவும் இவர் ஸ்டைலாக வைத்திருக்கும் அந்த மொட்டை, குங்குமம், இதெல்லாம் ரசிகர்களை குறிப்பாக ஈர்த்தது.
2002 ஆம் ஆண்டில் இந்த திரைப்படம் ஒரு நல்ல ஹிட்டை கொடுத்தது. இதற்குக் காரணம் இந்த திரைப்படத்தை இயக்கிய சிங்கம் புலி தான். கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும் இவர் இன்று காமெடியனாக தோன்றினாலும், அன்று ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுத்தவர் என்பது உண்மை.
வைதேகி காத்திருந்தாள்..
விஜயகாந்த் திரைப்படத்தில் தாடியுடன் வந்தாலும், பல்வேறு ரசிகர்கள் கூட்டம் கூடியது இத்திரைப்படத்தின் மூலம் தான். திரைப்படத்தில் இசை சொல்லவே வேண்டாம் இளையராஜா இசையில் பின்னி எடுத்திருப்பார். 90ஸ் காலத்தில் பல திரைப்படங்களில் காமெடியனாக நடித்த ஆர் சுந்தரராஜன் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ஊர் காவலன்..
ரஜினிகாந்த் மற்றும் ராதிகா இணைந்து நடித்த திரைப்படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்தது. இந்த திரைப்படத்தை இயக்கி பெரும் வெற்றியை கொடுத்தவர் மறைந்த காமெடி நடிகர் மனோபாலா தான். இவர் மண்ணை விட்டு மறைந்தாலும் இவருக்கு இருக்கும் தமிழ் ரசிகர்கள் ஏராளம்.
மனுநீதி..
2000 ஆம் ஆண்டு முரளி நடித்து, சினிமா உலகம் முழுவதும் பாராட்ட பெற்றது மனுநீதி திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்கியவர் வேறு யாரும் இல்லை தற்போது வரையிலும் காமெடி நடிகராக வலம் வரும் தம்பி ராமையா தான்.