Gossip: என்னதான் சினிமாவில் நடித்து கோடி கோடியாய் காசு சேர்த்து வைத்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் வாய்ப்புகள் குறைவது சகஜம்தான். அதில் ஹீரோயின்களுக்கு சில வருடங்கள் தான் மார்க்கெட் இருக்கும்.
அப்போது கவனத்தை சிதறவிடாமல் நடித்து சம்பாதித்துக் கொண்டால் தான் உண்டு. இல்லை என்றால் அந்த இடம் வேறு ஒருவருக்கு சென்று விடும். அப்படித்தான் ஒரு நடிகைக்கு நடந்துள்ளது.
நம்பர் ஒன் ஹீரோயின் ஆக தமிழ் தெலுங்கு என கொடிகட்டி பறந்தவர் தான் இந்த நடிகை. ஆரம்பத்தில் நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் கோலிவுட்டில் சாக்லேட் பாய் ஹீரோ ஒரு வருடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
இரண்டாவது முறையும் கசந்து போன காதல்
அது நெருக்கமான நிலையில் இருவரும் உருகி உருகி காதலித்தார்கள். ஆனால் காரியம் முடிந்த கையோடு நடிகர் கழட்டிவிட்டார். இதனால் மனமுடைந்து போன நடிகை அக்கடதேசத்தில் கவனம் செலுத்தி வந்தார்.
அங்கு பிரபல ஹீரோவுடன் நெருக்கம் ஏற்பட்டு லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ஆனால் கல்யாணம் என்று சொன்னதும் அந்த நடிகரும் அல்வா கொடுத்துவிட்டார்.
இதனால் நொந்து போன நடிகை நடிப்பில் கவனம் செலுத்தாமல் ஒதுங்கி இருந்தார். தற்போது தன்னைத்தானே மீட்டுக் கொண்டு மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். ஆனால் கல்யாணம் என்று சொன்னால் மட்டும் வேப்பங்காய் போல் அவருக்கு கசக்கிறதாம்.
எப்படியும் அவருக்கு திருமணம் செய்து வைத்தே ஆக வேண்டும் என அவருடைய குடும்பத்தினர் இப்போது தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்துள்ளார்களாம்.