Ilayaraja : தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் இசை என்றாலே அனைவராலும் நன்கு அறியப்பட்டவர் இளையராஜா. இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. அதே போல தான் கவிஞர் வைரமுத்து. இவரது பாடல் வரிகள் அனைத்துமே நம் மனதை வருடும் வகையில் இருக்கும்.
வைரமுத்து வரிகள் மற்றும் இளையராஜா இசை என்றாலே பல பேருக்கு கொள்ளை பிரியம். அதேபோல இவர்களும் இருவரி கவிதை போல ஒருகாலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தவர்கள் தான்.
இளையராஜாவிற்கும் வைரமுத்துவுக்கும் இடையே உள்ள மோதல்..
தற்போது சில பிரச்சனைகள் காரணமாக பிரிந்து விட்டார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் என்ன பிரச்சனை என வைரமுத்துவும் இதுவரை கூறியதில்லை! இளையராஜாவும் இதுவரை கூறியதில்லை! பிரிந்து சென்றாலும் ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருவரிடத்திலும் இருந்ததில்லை.
ஆனால் இன்று இளையராஜாவின் சகோதரர் “கங்கை அமரன்” தற்போது அளித்திருந்த பேட்டி ஒன்றில், வைரமுத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையேயான பிரச்சனைகள் பற்றி சில கருத்துக்களை முன் வைத்துள்ளார்.
அதாவது வைரமுத்து ஒரு சில இடங்களில் இளையராஜா இன்று இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு காரணம், முழுக்க முழுக்க என்னுடைய பாடல் வரிகள்தான் என்பதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். இவ்வாறு இவர் பேசியது இளையராஜாவிற்கு தெரிய வர இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் பிரிந்து சென்றதற்கு காரணம் இதுதான் என கங்கை அமரன் கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இதை எனது அண்ணன் இளையராஜா எங்குமே தெரிவிக்கவில்லை என்றும, நான் ஒரு உளறுவாய் அதனால் உளறி விட்டேன் எனவும் கூறியுள்ளார். இதைப்பற்றி இளையராஜா எதுவும் வாய் திறப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.