Memes: சூப்பர் ஸ்டார் நடிப்பில் லோகேஷ் இயக்கி இருக்கும் கூலி நாளை வெளியாகிறது. இதற்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் திருவிழா போல் இதை கொண்டாடுவதற்கு காத்திருக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்து இருக்கும் இப்படத்தில் வேறு மொழிகளில் இருக்கும் முன்னணி ஹீரோக்கள் நடித்துள்ளனர். அது தவிர நாம் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் இருப்பதாக கூறுகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க படத்திற்கு டிக்கெட் வாங்குவது குதிரை கொம்பாக இருக்கிறது. முதல் நாள் முதல் ஷோ பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கின்றனர்.

தயாரிப்பு தரப்பு பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு டிக்கெட்டை கொடுத்து விடுமுறையையும் அறிவிக்க சொல்லியிருக்கின்றனர். இப்படி ஒரு டீல் நடந்து கொண்டிருக்க தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் அடுத்தடுத்த நாட்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது.

எல்லா திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கும் நிலையில் படம் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் தான் அதிகமாக இருக்கிறது. லோகேஷ் உங்களை நம்பி இவ்வளவு டிமாண்ட்லயும் டிக்கெட் வாங்கிட்டேன்.

லியோ மாதிரி ஏதாவது ஒன்ன கிண்டி வச்சிடாத சாமி என வெளிப்படையாகவே நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அதேபோல் நாளைய தினம் என்ன சொல்லி காலேஜுக்கு லீவு போடலாம் என இளைஞர் பட்டாளமும் தீவிரமாக யோசித்து வருகிறது.

இப்படியாக கூலி பட ரிலீஸ் முன்னிட்டு சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கும் சில மீம்ஸ் தொகுப்பு இதோ.