Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவை கண்டிக்க யாருமில்லை என்று சொல்வதற்கு ஏற்ப விஜயா இஷ்டத்துக்கு ஆடி வருகிறார். சும்மா நல்ல பெயர் எடுத்து அதை வீடியோவாக கொடுத்து ஒரு டாக்டர் பட்டத்தை வாங்கி விடலாம் என்று புத்தி கெட்டுப் போய் விஜயா செய்யும் செயல்கள் அனைத்தும் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா என்று கடுப்பாகும் அளவிற்கு விஜயாவின் ஆட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
அதாவது ஏழை குடும்பத்தில் இருந்து வந்த மீனாவை நல்லபடியாக பார்த்து மாமியார் தாங்குகிறார் என்று எல்லோரும் சொல்லும் விதமாக மீனாவை கூப்பிட்டு பாசமாக பேசி புடவையை கொடுத்து அக்கறையாக பழகுவது போல் விஜயா நடிக்கிறார். அதை பார்வதி வீடியோ எடுக்கும் பொழுது அனைவரும் என்ன நடக்குது என்று தெரியாமல் மெய்மறந்து போய் நிற்கிறார்கள்.
பிறகு வீடியோ எடுத்து முடித்தவுடன் வழக்கம்போல் மீனாவை திட்டி அவமானப்படுத்தி விடுகிறார். அப்பொழுது கூட விஜயாவை கண்டிப்பதற்கு யாரும் முன் வரவில்லை. இதோடு விடாமல் கிருஷிடமும் பாசத்தைக் காட்டி அப்பா அம்மா இல்லாத அனாதை குழந்தையை நாங்கள்தான் வளர்கிறோம் என்று சொல்லி அவனை சந்தோஷப்படுத்தும் விதமாக அவனுடன் ஆடி மகிழ்விக்கிறார்.
இந்த வீடியோவையும் பார்வதி எடுத்தவுடன் வழக்கம்போல் கிரிசை திட்டிவிட்டு அனுப்பி விடுகிறார். இதையெல்லாம் பார்த்து என்ன நடக்குது என்று புரியாமல் அனைவரும் குழப்பத்திலேயே இருக்கிறார்கள். அடுத்ததாக சீதாவின் மாமியார், சீதாவிற்கு தாலி பெருக்கு பங்க்ஷன் வைக்க போவதாக மீனாவின் அம்மாவிடம் சொல்லிவிட்டார்.
இந்த பங்க்ஷனில் முத்து குடும்பமும் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லியதால் மீனாவிடம் முறைப்படி நான் வந்து உங்க குடும்பத்தில் சொல்கிறேன் என்று மீனாவின் அம்மா, விஜயா வீட்டுக்கு போய் விடுகிறார். அங்கே போனதும் அண்ணாமலை, சந்தோஷமான நிகழ்ச்சி என்று சொல்லி ரவி முத்துவை கலந்து கொள்ள சொல்கிறார். உடனே விஜயா இந்த வீட்டில் பெரிய மனுசியாக நான் எதற்கு இருக்கிறேன்.
நான் போய் முன்னாடி நின்று எல்லாத்தையும் நடத்துகிறேன் என்று சொல்லி சீதாவின் தாலி பெருக்கு பங்க்ஷன்க்கு பார்வதியை கூட்டிட்டு போகிறார். அங்கே போனதும் சீதாவை சந்தோஷமாக வாழ்த்தி சீதாவுக்கு கொடுக்க வேண்டிய கிப்ட் கொடுத்து அதையும் புகைப்படமாக எடுத்துக் கொள்கிறார். இதையெல்லாம் வைத்து டாக்டர் பட்டம் வாங்கிவிடலாம் என்று விஜயா ஓவராக ஆட்டம் ஆடுகிறார்.
ஆனால் விஜயாவின் இந்த ஆட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சம்பவம் நடக்க வேண்டும். அப்பொழுதுதான் இந்த விஜய திருந்துவதற்கு வாய்ப்பு வரும். மேலும் சீதா வீட்டிற்கு போன விஜயா, வீடியோவை எடுத்ததும் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல் அங்கு வந்திருப்பவர்கள் முன்னாடி மீனாவையும் மீனா குடும்பத்தையும் அசிங்கப்படுத்தி சண்டை போட்டு பிரச்சினை பண்ண வாய்ப்பு இருக்கிறது.