ethirneechal 2 serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றார் எதிர்நீச்சல் 2 சீரியலில், ஈஸ்வரியின் நிலைமைக்கு குணசேகரன் தான் காரணம் என்று ஜனனி குற்றவை மூலம் தெரிந்து கொண்டார். ஆனால் இதற்கு ஏதாவது ஆதாரம் வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு சென்று தேடிப் பார்க்கிறார்கள். அப்படி தேடும்போது அறிவு குறுக்கே வந்து நந்தனிடம் வசமாக வாங்கிக் கொண்டார்.
குணசேகரனிடமும் ஈஸ்வரி அக்காவின் நிலைமைக்கு உங்களுக்கு தூக்கு தண்டனை வாங்கி கொடுக்காமல் விடமாட்டேன் என்று ஜனனி சவால் விட்டார். இதனால் பயந்து போன குணசேகரன் ஒரேடியாக ஜனனியை வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்பதற்காக சக்திக்கு வேறு ஒரு கல்யாணத்தை பண்ணி வைப்பதற்கு தயாராகி விட்டார்.
அந்த வகையில் தர்ஷன் மற்றும் சக்திக்கு ஒரே நேரத்தில் கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று குணசேகரன் கதிர் ஏற்பாடுகளை பண்ணுகிறார். ஆனால் ஜனனி, சக்தி வைத்து என்னை அடக்கலாம் என்று நினைத்தால் அவங்களுக்கு நான் கொடுக்கும் பதிலடி வேற மாதிரி இருக்கும் என்று அருவாள் தூக்கி ஆக்ஷனில் இறங்கி விட்டார்.
இதுவரை வாய்சவடால் மட்டும் விட்டுக் கொண்டு இருந்த பெண்களுக்கு தற்போது ஈஸ்வரியின் நிலைமைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குணசேகரன் செய்த அட்டூழியத்திற்கு தண்டனை வாங்கி கொடுத்து ஜெயித்து காட்டப் போகிறார்கள். அந்த வகையில் அறிவுகரசியிடம் இருக்கும் ஆதாரத்தை வைத்து குணசேகரன் கதை முடிய போகிறது.
குற்றவை கையில் இருக்கும் ஈஸ்வரி ஃபோனில் வீடியோக்கள் டெலிட் ஆகி இருப்பதால் அதை ரீஸ்டார்ட் பண்ணி ஆதாரத்தை தேட போகிறார்கள். ஆனால் குற்றவை, ஈஸ்வரி விஷயத்தில் தலையிடக்கூடாது என்பதற்காக குணசேகரன் மூலமாக பெரிய இடத்து சிபாரிசு செய்து குற்றவையை இதிலிருந்து ஒதுங்க சொல்லி இருக்கிறார்கள்.
ஆனாலும் குணசேகரன் செய்த அட்டூழியத்தை கண்டுபிடிக்கும் விதமாக அடுத்தடுத்து காட்சிகள் விறுவிறுப்பாக அமைய வேண்டும். இந்த குணசேகரன் கேரக்டர் இதோடு போதும் என்று சொல்வதற்கு ஏற்ப ஆணாதிக்கம் தலைவிரித்து ஆடுகிறது,. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூடிய சீக்கிரத்தில் பெண்கள் ஜெயித்த மாதிரி குணசேகரன் தண்டனை அனுபவிக்கிற மாதிரி கதையை கொண்டு வர வேண்டும்.