Memes: கடந்த நான்கு நாட்களாக மாதம்பட்டி ரங்கராஜ் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அதிலும் ட்விட்டர் தளத்தில் இவரை கிழித்து தொங்கவிட்டு வருகின்றனர்.

இதற்கு காரணம் அவருடைய இரண்டாவது திருமணம் தான். ஏற்கனவே இது குறித்து கிசுகிசுக்கள் வந்தது. ஆனால் இப்போது பார்த்தால் அவருடைய இரண்டாவது மனைவி திருமணம் ஆன செய்தியை போட்டோவுடன் வெளியிட்டுள்ளார்.

அது மட்டும் இன்றி மறுநாளே ஆறு மாத கர்ப்பம் என்று கூறி அதிர வைத்திருக்கிறார். அது எப்படி திமிங்கலம் என நெட்டிசன்கள் இதை மீம்ஸ் போட்டு கலாட்டா செய்து வருகின்றனர்.

அதேபோல் முதல் மனைவியை விவாகரத்து செய்யல. இது என்ன கூத்து விஜய் டிவில இருக்கிறவங்க எல்லாம் இப்படி தானா என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர் முதல் மனைவிய டைவர்ஸ் பண்ணிட்டாரான்னு கேட்டா கமல்ஹாசன் மாதிரி புரியாத மாதிரியே விளக்கம் கொடுக்குறீங்க என ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும் மாதம்பட்டி காஸ்டியூம் எல்லாம் நல்லா இருக்குன்னு பாத்தா காஸ்டியூம் டிசைனர் உடன் திருமணமா. ஆடி மாசம் கல்யாணம் பண்ணி அண்ணன் ஒரு புரட்சி பன்னிருக்காரு. அத பத்தி பேசாம திட்டிகிட்டு இருக்கீங்களே என காலாய்க்கின்றனர்.

இப்படி சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கும் மாதம் பட்டிய ரங்கராஜ் பற்றிய சில மீம்ஸ் தொகுப்பு இதோ.
