2022ஆம் ஆண்டு கன்னட ஹீரோ ரிஷப் செட்டி.இயக்கி நடித்த படம் காந்தாரா 20 கோடிகளில் எடுக்கப்பட்ட அந்த படம் 450 கோடிகள் வசூலித்து. படத்தை பார்த்தவர்களை மிரட்டி விட்டார் ரிஷப் செட்டி. ஆரவார காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இயக்கியிருந்தார்.
முதல் பாகத்திலேயே இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருவது போல் லீட் கொடுக்கப்பட்டது. பஞ்சருளி என்ற கடவுளை வழிபட்டு வரும் பக்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளும் தான் படத்தின் மையக்கரு.
முதல் பாகமே மிரட்டிய நிலையில் இப்பொழுது அதன் இரண்டாம் பாகத்தையும் முடித்து விட்டார் ரிஷப் செட்டி. அடுத்த மாதம் தீபாவளிக்கு இந்த படம் வெளிவருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
ஒரு வருடங்களாக இந்த படத்தை எடுத்து வந்தார் ரிஷப் செட்டி. இந்த படம் சூட்டிங் நடைபெற்ற நேரத்தில் ஏகப்பட்ட அமானுஷ்யங்களை இந்த படக்குழுவினர் சந்தித்து வந்துள்ளனர். குறிப்பாக அந்த ஒரு வருட காலகட்டத்தில் இந்த டீம்மை சார்ந்த 5 பேர் மரணித்துள்ளனர்.
இந்த படம் மலைப்பகுதியில் சூட்டிங் நடைபெற்றுள்ளது. அந்த நேரத்தில் எதிர்பாராமல் சூட்டிங் வேன் ஒன்று மலையில் இருந்து 20 அடி பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததாம். அதில் இருந்த பதினைந்து பேர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர்.
இந்த படத்தில் ஆறு சண்டை காட்சிகள். அப்பொழுது ஆற்றுப்பகுதியில் நடைபெற்ற ஒரு சண்டைகாட்சியில் படகு கவிழ்ந்து கேமரா முதல் அணைத்து உபகரணங்களும் நீருக்கடியில் போய்விட்டதாம். இப்படி இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்திலிருந்து பல அமானுஷ்ய சம்பவங்களை சந்தித்து வந்துள்ளனர் இந்த குழுவினர்.