HamalHaasan : உலகநாயகன் என்று புகழ்பெற்று இன்று வரையிலும் ஓய்வில்லாமல் திரையில் நடித்து வரும் ஒரே நாயகன் கமலஹாசன்.
சினிமாவில் எந்தவிதமான டப்பிங் இல்லாமல் ஆரம்பகால கட்டங்களில் இருந்தே தனது குரல் வளத்தையும், நடிப்பு வளத்தையும் திரையில் காண்பித்து ரசிகர்களின் கூட்டத்தை சேர்த்தவர். தனது கடின உழைப்பை திரையில் போட்டு சில திரைப்படங்களுக்குப் பிறகு “உலக நாயகன்” கமலஹாசன் என்ற பட்டத்தை பெற்றார்.
நாயகன், மூன்றாம் பிறை, இந்தியன், தசாவதாரம், சத்யா அபூர்வ சகோதரர்கள், விக்ரம் இந்தத் திரைப்படங்கள் எல்லாம் கமல்ஹாசன் தமிழ் மக்களின் மனதில் ரிஜிஸ்டர் செய்த டாப் திரைப்படமாகும்.
பெருமை சேர்த்த கமல்..
கமலின் திரைப்படங்கள் வெறும் தமிழில் மட்டும் வெளியானது இல்லை. அவர் பழமொழிகளில் நடித்திருக்கிறார். உலகம் எங்கும் பழமொழிகளில் கமலின் திரைப்படம் பல நாட்களோடு சாதனை படைத்துள்ளது.
மரோசரித்ரா இன்று தெலுங்கில் வெளியான திரைப்படம் -693 நாட்கள் திரையில் ஓடியது. குரு என்ற திரைப்படம் 1000 நாட்களுக்கு மேல் இலங்கையில்
ஓடியது. மூன்றாம் பிறை 329 நாட்கள் திரையில் ஓடியது. சாகர சங்கமம்- 511 நாட்கள் திரையிடப்பட்டது. இந்துருது சந்திருடு- இந்த தெலுங்கு திரைப்படம் கிட்டத்தட்ட 365 நாட்கள் ஓடியது.
இந்தியா முழுவதும் கமலின் திரைப்படங்கள் பல நாட்கள் திரையில் ஓடி ” அதிக நாட்கள் திரையில் ஓடிய ஒரே நட்சத்திரம்” என்றும் OG பான் இந்தியன் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.