Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், பிரச்சினையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய முத்து மீனா விஜயாவிடம் வந்து இனிமேல் நீங்கள் நிம்மதியாக வெளியே போகலாம் என்று சொல்கிறார். ஏன் என்னாச்சு என்று விஜயா கேட்ட பொழுது எல்லா பிரச்சினையும் நாங்கள் பேசி தீர்த்து விட்டோம். இரண்டு குடும்பமும் சம்மதமாகி கல்யாணம் பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள்.
அதனால் இனி அவர்களால் நீங்கள் பயப்படத் தேவையில்லை என்று முத்து சொல்லி விடுகிறார். உடனே பார்வதி, உங்க கூட மனோஜும் ரோகிணியும் வந்தாங்களா என்று கேட்கிறார். ஆமாம் வந்தாங்க என்று சொல்லிய பொழுது விஜயா, என் பையன் படிச்ச பையன் அவன் பேசி சுமுகமாக பிரச்சினையை முடித்து வைத்திருப்பான் என்று சொல்கிறார்.
உடனே முத்து, மனோஜை பார்த்து அப்படியா என்று நக்கலாக கேட்கிறார். அதற்கு மனோஜ், நான் எதுவும் சமாதானப்படுத்தவில்லை முத்து தான் பேசி சமாதானப்படுத்தினான் என்று சொல்லிவிடுகிறார். உடனே எல்லோரும் முத்து மீனாவை பாராட்டிய நிலையில் வழக்கம் போல் விஜய்யா இவர்களை அலட்சியப்படுத்தி விட்டார். அடுத்ததாக மனோஜ் பீட்சா வாங்கிட்டு வந்து ரோகினிக்கு கொடுக்கிறார்.
அதை ரோகினி, கிருஷுக்கு கொடுக்கும் பொழுது மீனா பார்த்து விடுகிறார். உடனே முத்துவிடம் சொல்லும் பொழுது முத்துவும் மீனாவும் ரோகினி இடம் ஏதோ ஒரு ரகசியம் இருக்கிறது. அதை சீக்கிரத்தில் கண்டுபிடிக்க வேண்டும் என்று முத்து சொல்கிறார். இதை கேட்டதும் ரோகிணி இனி கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.
அடுத்ததாக பார்வதி அத்தை வீட்டிற்கு ரதி தீபன் குடும்பத்தில் இருப்பவர்கள் வந்து நாங்கள் என்னதான் கல்யாணத்துக்கு சம்மதித்தாலும் இப்படிப்பட்ட ஒரு விஷயம் நடந்ததுக்கு அப்பறம் எங்களுக்கு ரொம்பவே மன உளைச்சலாக இருக்கிறது. அதனால் அந்த மன உளைச்சலை சரி செய்ய வேண்டும் என்றால் நீங்கள் நஷ்ட ஈடாக 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்கள்.
இதை கேட்டதும் பார்வதி நான் ஏன் கொடுக்க வேண்டும் என்று சொல்லி இப்பொழுது கோர்ட் கேஸ் என்று போய்விடுவோம் என்று மிரட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இதனால் பயந்து போய் பார்வதி விஜயா வீட்டுக்கு சென்று பணம் கேட்டு மிரட்டியதை சொல்லுகிறார். உடனே இதற்கெல்லாம் காரணம் இந்த வீணா போன மனோஜன் என்று முத்து சொல்கிறார்.
அதற்கு விஜயா, மனோஜ் என்ன பண்ணினான் என்று கேட்கிறார். அப்பொழுது முத்து பிரச்சினையை கூறுகிறேன் என்று சொல்லி ரோகிணியும் மனோஜும் அவங்க வீட்டுக்கு சென்று நஷ்ட ஈடாக பணம் தருகிறோம் என்று பேசி இருக்கிறார்கள் என நடந்த விஷயத்தை சொல்லி விடுகிறார். உடனே விஜயா, மனோஜிடம் நீ அப்படி பேசினியா என்று கேட்கிறார். அப்பொழுது மனோஜ் ஆமாம் இந்த ஐடியா ரோகிணி தான் கொடுத்தார் என்று சொல்லிவிடுகிறார்.
இதை கேட்டதும் விஜயா, அப்படி என்றால் இந்த பிரச்சனைக்கு காரணம் ரோகிணி தான் என்று சொல்லி அவங்க கிட்ட 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு பணத்தையும் ரோகிணியை ரெடி பண்ணி கொடுக்க வேண்டும் என்று ரோகிணிக்கு செக் வைத்து விடுகிறார். ரோகிணி ரகசியம் வெளிவருவதற்கு முன் ரோகிணி விஜயாவிடம் மாட்டிக் கொண்டு ஒவ்வொரு நாளும் சித்திரவதை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்.