Vishal: ஒரு மனுஷன் பொய் சொல்லலாம், ஆனால் ஏக்கர் கணக்குல சொல்லக்கூடாது என கவுண்டமணி ஒரு காமெடியில் சொல்லி இருப்பார்.
அது விஷாலுக்கு தான் போகணும் போல. ஒரு காலத்தில் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு இணையாக கொண்டாடப்பட்ட விஷால் அவருடைய நடவடிக்கைகளாலேயே ட்ரோல் மெட்டீரியல் ஆகிவிட்டார்.
வித்தை காட்டிய விஷால்
இப்படிப்பட்ட சமயத்தில் தான் மத கத ராஜா இசை வெளியீட்டு விழாவின் போது உடல் நடுக்கத்துடன் காணப்பட்டார் விஷால். கடுமையான வைரஸ் காய்ச்சலால் தான் விஷால் இப்படி இருக்கிறார் என சொல்லப்பட்டது.
ஆனால் இன்னொரு பக்கம் விஷாலுக்கு ஏகப்பட்ட கெட்ட பழக்கங்கள் இருந்தது. அதன் விளைவு தான் தற்போது அவருடைய உடல்நிலை மற்றும் முகத்தோற்றம் மாறி இருக்கிறது என பேச ஆரம்பித்து விட்டார்கள். தற்போது இதை மூடி மறைக்க விஷால் ஒரு ஜகஜால வேலை பார்த்திருக்கிறார்.
சமீபத்தில் ரெட் பிளவர் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருக்கிறது. அதில் கலந்து கொண்ட விஷால் உடல் நடுங்குவது போல் நடிக்கிறார். பின்னர் தெளிவாக பேசி நான் இந்த மாதிரி உடல் நடுக்கத்துடன் இருந்ததால் தான் அந்த வீடியோ வைரலாகி மதகத ராஜா வெற்றி பெற்றது.
தற்போது இந்த படமும் நான் நடுக்கத்துடன் காணப்படும் வீடியோ வைரலாகி வெற்றி பெறட்டும் என வாழ்த்துகிறார். இதெல்லாம் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலை என்ற கதைதான்.