Memes: சோசியல் மீடியாவில் எங்கு என்ன நடந்தாலும் உடனே அதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து விடுகின்றனர். அதில் சினிமா பிரபலங்கள் தான் அதிகமாக சிக்குவார்கள்.

அப்படித்தான் தற்போது நயன் விக்கி இருவரும் தங்கள் பிள்ளைகளுடன் பழனி முருகனை தரிசித்துள்ளனர். அந்த வீடியோக்கள் அதிவேகமாக வைரலாகி வருகிறது.

அதேபோல் ஏதோ காணாததை கண்டது மாதிரி மக்கள் அவர்களுடன் போட்டோ எடுக்க பின்னாடியே போவதும் அவர்கள் போகும் இடங்களில் எல்லாம் கூட்டம் கூடுவதும் என ஓவராகத்தான் இருக்கிறது.

இது ஒரு புறம் இருக்க மீடியாக்கள் வித்தியாசமான டைட்டில் வைத்து இந்த செய்தியை பரப்புகின்றனர். எப்படி என்றால் உயிரை கையில் பிடித்தபடி பழனி முருகனை தரிசித்த நயன்தாரா.

உலகத்துடன் வந்த விக்னேஷ் சிவன் என நியூஸ் சேனல்கள் அலப்பறை அதிகமாகவே இருக்கிறது. உடனே இணையவாசிகள் தங்கள் பங்குக்கு இதை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

உலகத்தை சுற்றி வந்த பழனி முருகனுக்கு உலகை காட்டிய நயன்தாரா. என்னடா zoo-ல நின்னு பாக்குற மாதிரி பாக்குறீங்க அவங்க தான் நார்மல் பீப்பிள் கிடையாது.

இப்படி பல மீம்ஸ் டிரெண்டிங்கில் இருக்கிறது. அதன் தொகுப்பு இதோ.