உலக அளவில் 1000கோடி தாண்டி தட்டி தூக்கிய 8 படங்கள்.. ஈடு கொடுக்குமா ராமாயணா! – Cinemapettai

Tamil Cinema News

Cinema : சினிமா திரையுலகம் என்றாலே வரவர மக்கள் தொகை அதிகரிப்பு போல, சினிமா துறையின் வளர்ச்சி உள்ளது. விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் உள்ள சாதனை படங்கள் எல்லாம் தற்போது சாதாரணமா ஆகிவிட்டது. கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து ஒரு படத்தை எடுக்கிறாரகள்.அது நல்ல லாபத்தை ஈட்டித்தந்தால் மட்டுமே அதை ஈடுகட்ட முடியும்.

அப்படி போட்ட பட்ஜெட்க்கு மேல் வசூலை பெற்றுத்தர வேண்டும் என்பதை படத்தை எடுப்பவர்கள் ஒரே குறிக்கோள். அதே போல் ஒரு சில படங்கள் அதை எட்டிவிடுகின்றன. ஒரு சில படங்கள் தோல்வியை சந்திக்கின்றன. ஆனால் ஒரு சில படங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்க்கு வசூலை அல்லி குவித்துக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில் 8 படங்கள் 1000 கோடியையும் தாண்டி வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது. வசூல் செய்த 8 படங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

உலக அளவில் 1000கோடி தாண்டி தட்டி தூக்கிய 8 படங்கள்..

தங்கல் : இது 2016ம் ஆண்டு வெளியான ஹிந்தி மொழி படமாகும். இந்த படத்தில் அமீர்கான், மகாவீர் சிங் ஆகியவ்ர் இணைந்து நடித்துள்ளனர். இதில் தன் 2 மகள்களையும் மல்யுத்த வீராக மாற்றுவதே கதை. இந்த படம் தற்போது 2070 கோடி வசூலை பெற்றுத்தந்துள்ளது.

புஷ்பா 2 : புஷ்பா 2 படம் 2024-ம் ஆண்டு வெளிவந்தது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தானா ஆகியோர் இனைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் இதுவரை 1871கோடி வசூலை பெற்றுத்தந்துள்ளது.

பாகுபலி 2 : இந்த படம் கடந்த 2017ம் ஆண்டு திரிக்கு வந்தது. இது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படம் தற்போது வரை 1810 கோடி வரை வசூலை பெற்றுத்தந்துள்ளது. இந்த படத்தில் பிரபாஸ்,அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

RRR : RRR படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி இதுவரை 1387 கோடி வசூலை இதுவரை பெற்று தந்துள்ளது. இந்த படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

KGF சாப்டர் 2 : இந்த படம் 2022ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதஹு. வெளியாவதற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படம் இதுவரை 1230 கோடி வசூலை பெற்றுள்ளது. இதில் நடிகர் யாஷ் அவர்கள் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருப்பார்.

ஜவான் : ஜவான் படம் 2023ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அட்லீ இயக்கத்தில் மிகப்பெரிய வசூலை தந்துள்ளது. இந்த படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர்கள் நடித்திருப்பார்கள். இந்த படம் இதுவரை 1152 கோடி வசூலை பெற்று தந்துள்ளது.

கல்கி 2898 AD : இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் நிறய பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 2024ம் ஆண்டு வெளிவந்தது. இதுவரை இந்த படம் 1140 கோடி வசூலை பெற்றுத்தந்துள்ளது.

பதான் : இதுவும் ஒரு அதிரடி திரைப்படம். இப்படம் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்துள்ளது. இந்த படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் இதுவரை 1054 கோடியை பெற்று தந்துள்ளது.

இதனால் இனிமேல் வெளிவரவிருக்கும் பெறுவாய் பட்ஜெட் படங்களான “ராமாயணா” மற்றும் “war 2” ஆகிய பெரிய பட்ஜெட் படங்கள் மேற்கண்ட படங்கள் மத்தியில் தற்போது வெளிவந்து இந்த படங்களின் சாதனைகளை முறியடிக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம்.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.