Movies now : ஒரு திரையரங்குகளுக்கு நான்கு படங்கள் ரிலீசானால் அதில் ஒரு படம் மட்டும் தான் அதிகளவு மக்களின் கவனத்தை ஈர்க்கிறது. அந்த வகையில் தற்போது மக்களின் அதிக பாராட்டு மலையை பெற்று வரும் படம் தான் தலைவன் தலைவி.
நேற்று (25.7.2025) விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் காம்பினேஷனில் வெளியானது. திரைப்படம் வெளியிடும்போது படம் சுமாராக இருக்கும் என்று நினைத்த மக்கள் படத்தை பார்த்து முடித்த பிறகு, படம் தாறுமாறாக இருக்கிறது என்று தங்களது நேர்மறையான விமர்சனத்தை பகிர்ந்து வருகின்றனர்.
படத்தின் விமர்சனம்..
இந்த படத்தை பொறுத்தவரையிலும் சந்தோஷ நாராயணனின் பாடல் “லேலேலே” இது ரசிகர்கள் தற்போது கொண்டாடப்பட்டு வரும் பாடலாக இருக்கிறது. நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதியின் காம்போ திரையில் பயங்கரமாக இருக்கிறது.
யோகி பாபுவின் காமெடி ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப நல்லா இருக்கிறது. அவர் ஏதாவது பண்ணாலே சிரிப்பாக இருக்கிறது. நித்யா மேனன் இரண்டு டிகிரி முடித்தவராக இருப்பார். விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக இருப்பார். திருமணத்துக்கு முன்பு நல்லா பேசிக் கொண்டிருக்கும் இந்த ஜோடி திருமணமான பின்பு அப்படியே மாறுகிறார்கள். ஒரே சண்டை தான்.
இந்தப் படத்தை ஒரு பொழுதுபோக்காக பார்க்கும்போது ரொம்பவும் சிரிப்பாக இருக்கும். மாமியார், மருமகளுக்குள் இருக்கும் சண்டைகள் என பல்வேறு காட்சிகளை முரட்டுத்தனமாகவும், சிரிப்பாகவும் திரையில் காண்பித்திருப்பார் இயக்குனர் பாண்டியராஜ்.
உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தின் முரட்டு பாகம் தான் இந்த தலைவன் தலைவி தமிழ் திரைப்படம். கிட்டத்தட்ட 20 இடங்களில் நாம் சிரிக்க வேண்டிய காமெடி காட்சிகள் வருகிறது. நிச்சயம் குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். இது முற்றிலும் பொழுதுபோக்கான திரைப்படம்.