சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மூன்று முடிச்சு சீரியலில், நந்தினியை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று சுந்தரவல்லி ஒவ்வொரு பிளானாக போட்டு பிரச்சினை பண்ணி வருகிறார். ஆனால் சூர்யா, என்னை நம்பி வந்தவளுக்கு நான் துணையாக நிற்க வேண்டும் என்று எல்லா இக்கட்டான சூழ்நிலையிலும் நந்தினிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக சூர்யா கை கொடுக்கிறார்.
ஆனால் சூர்யாவின் இன்னொரு நோக்கம் சுந்தரவள்ளியை நோகடிக்க வேண்டும் என்பதற்காக நந்தினியை பகடைக்கையாக யூஸ் பண்ணுகிறார். இதை தெரிந்து கொண்ட நந்தினி இவர்களையெல்லாம் விட்டு ஒரேடியாக கிராமத்திற்கு போக வேண்டும் என்று ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டு வருகிறார்.
அதற்கு ஏற்ற மாதிரி மாமனாரும் ஒவ்வொரு பிரச்சினையையும் சொல்லி நந்தினி கையை கட்டிப்போட்டு ஊருக்கு போக விடாமல் தடுக்கிறார். சூர்யாக்கு என்ன தான் மனதளவில் நந்தினி தன்னுடைய மனைவி தனக்கு பிடித்திருக்கிறது என்றாலும் அதை வெளிப்படுத்தும் விதமாக காதலை சொல்லவும் இல்லை, பாசத்தை காட்டவும் தயாராகவே இல்லை.
இதனால் வெறுத்துப்போன நந்தினி, சூர்யாவிடம் வந்து என்னை எங்க ஊருக்கே விட்டு விடுங்கள். நான் போகணும் என்று அடம் பிடிக்கும் அளவிற்கு கேள்வி கேட்கிறார். ஆனால் சூர்யாவும் நந்தினியின் மாமனரும் சேர்ந்து கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ண வேண்டும் என்று பிளான் பண்ணி வருகிறார்கள்.
இது தெரிந்தால் சுந்தரவல்லி இன்னும் என்ன ஆட்டம் ஆட போகிறாரோ, நந்தினி என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.