Gossip: பிரபல நடிகர் பற்றிய பேச்சு தான் கடந்த சில நாட்களாக மீடியாவை சுற்றிக் கொண்டிருக்கிறது. சில படங்களில் நடித்திருந்தாலும் கூட கையில் இருக்கும் தொழில்தான் அவரை பிரபலமாக்கியது.
அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்ய போவதாக ஒரு செய்தி வந்தது. ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருக்கும் நிலையில் நடிகர் பற்றி செய்தி பரபரப்பை கிளப்பியது.
ஆனால் நடிகர் தரப்பில் இதெல்லாம் பொய் உண்மை கிடையாது என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது பார்த்தால் நடிகர் இரண்டாவது திருமணம் முடித்து விட்டார்.
கைதாக போகிறாரா நடிகர்.?
இந்த தம்பதிகளுக்கு இன்னும் சில மாதங்களில் குழந்தையும் பிறக்கப் போகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் இப்போது அந்த பிரபலத்தை பயங்கரமாக கலாய்த்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.
அதே சமயம் முதல் மனைவியின் ரியாக்சன் என்ன என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் எல்லோருக்கும் இருக்கிறது. தற்போது முதல் மனைவி நடிகருக்கு எதிராக புகார் கொடுக்கப் போவதாக செய்திகள் வந்துள்ளது.
முறைப்படி விவாகரத்து ஆகாத நிலையில் நடிகர் மீது எந்த நேரம் வேண்டுமானாலும் வழக்கு பாயும். கைதாகவும் வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.