Vijay : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் மற்றும் அரசியல் நாயகனாக உருவெடுக்கிறார் என்று பேசப்படும் தளபதி விஜய் சமீபத்தில் மதுரையில் நடத்திய மாநாடு வைரலானது. அந்த நிகழ்வில் விஜய் எடுத்த செல்ஃபி வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அளவில் பகிரப்பட்டது. இதை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் லைக் செய்துள்ளனர் என்பது புதிய விவாதத்துக்கு வழி வகுத்துள்ளது.
அதிக லைக்-ஐ கூட பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்ப்பாளர்கள்..
இந்த வீடீயோவை அதிகம் லைக் செய்து பார்க்கப்பட்டவர்களில் சிலர், “மத்திய பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், பீஹார் மாநிலங்களில் இருக்கும் மக்கள் 38% . இந்த மக்களுக்கு விஜய் யார் என்பதே தெரியாது” என கருத்து தெரிவித்துள்ளனர் விஜய் எதிர்ப்பாளர்கள். இதற்கு பதிலளித்த விஜய் ரசிகர்கள், வட இந்தியா, கிழக்கு இந்தியா, தென் இந்தியா அனைத்திலும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்ற வீடியோ ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.
YouTube மற்றும் Instagram புள்ளிவிபரங்கள் படி, விஜயின் பாடல் ட்ரெய்லர்கள் மற்றும் டீசர்களுக்கு பீஹார், ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து கோடிக்கணக்கான பார்வைகள் கிடைத்துள்ளன. இதனால், “விஜய் பிரபலம் தமிழ் சினிமாவைத் தாண்டி பான்-இந்தியா அளவில் பரவியுள்ளது” என்று ரசிகர்கள் பெருமிதம் கொள்கின்றனர். விஜய்யை பிடித்தவர்கள் கோடி பேர் வெளியில் உள்ளனர் என விஜய் டயலாக் வைத்து எதிர்ப்பாளரை கலாய்த்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.
மதுரை மாநாடு itself turned out to be a massive political statement. ரசிகர்கள் வீடியோவை லைக் செய்த மாநிலங்கள் விஜயின் பான்இந்தியா பிரபலத்தையும், சமூக ஊடகங்களில் அவர் உருவாக்கும் தாக்கத்தையும் நிரூபிக்கின்றன. விஜய் அரசியலில் இறங்கியது பான் இந்திய அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது நன்றாகவே புரிய வருகிறது.
விஜய் ரசிகர்கள் கூறுவதாவது..
“பீஹார், ஆந்திரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் விஜய் படங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கிறது. OTT மற்றும் டப்பிங் ரிலீசுகளால் விஜயின் மாஸ் ஹீரோ இமேஜ் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.”
இது மட்டுமல்லாமல், அவரது படங்கள் வெளிநாடுகளிலும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகின்றன. விஜயின் பான்இந்தியா ரசிகர் ஆதரவை வலியுறுத்தும் இந்த விவாதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இந்த விவாதம், “விஜய் அரசியல் பணி தேசிய அளவிலும் பேசப்படும் வாய்ப்பு இருக்கிறது” என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு அளிக்கிறது.
சர்ச்சையாகும் selfie வீடியோ..
இந்த வீடியோவிற்கு அதிக லைக் வந்ததை கூட பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்ப்பாளர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்காக வைக்கப்படும் சான்றுகள், விஜய் வெற்றியை என்றோ உறுதி படுத்திவிட்டன. எதிரியின் முழு கவனமும் விஜய் மீது திரும்பியப்பவே விஜய் பாதி வென்றுவிட்டார் இன்னும் தேர்தல் தான் மீதம் என விஜய் ரசிகர்கள் கூறி வருகிறார்களாம்.