Vijay : பொதுவாக நடிகர் விஜய்யை பற்றி பொது கருத்து ஒன்று நிலவி வருகிறது. அதாவது பொதுவாக ஒருசில விஜய் படங்கள் வெளியிட தடை விதித்து பிறகு ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.அதே போல் மாநாட்டிற்கும் ஏகப்பட்ட சிக்கல் அப்போ கண்டிப்பா விஜய் “முதலமைச்சர்” ஆகிவிடுவார் என பேசிக்கொள்கிறார்கள்.
அதே போல் இப்போது விஜய் முதல் மாநாட்டிற்கு இடம் தராமல் அலக்களித்து அந்த மாநாட்டை மாபெரும் வெற்றி மாநாடாக மாற்றிக்கொடுத்தது ஆளுங்கட்சிதான். அதே போல் தற்போது இரண்டாவது மாநாட்டிற்கும் இடைஞ்சல் செய்ய ஆரம்பித்து விட்டது.
எதிரின்னு நினைச்சு வளர்த்து விடும் ஆளுங்கட்சி..
முதல் மாநாடு பல நெருக்கடிகளை தாண்டி விஜய் நடத்தினார். இது முதல் மாநாடுதானே நடத்திட்டு போகட்டும் என எளிதாக விட்டுவிட்டனர் ஆளுங்கட்சியினர். ஆனால் முதல் மாநாட்டையே தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்துவிட்டார் விஜய். முதல் மாநாட்டிற்கு பிறகு அரசியல் களத்தில் பெரிய பூகம்பமே கிளம்ப ஆரம்பித்து விட்டது.
ஏற்கனவே இரண்டாவது மாநாட்டிற்கு அறிவித்திருந்த தேதி ஆகஸ்ட் 25, அன்று விஜயகாந்த் பிறந்தநாள் என பிரபலமாக பேசப்பட்டது. தேமுதிக-வும் TVK-வும் கூட்டணி போடப்போகிறது என்று பேசப்பட்ட நிலையில், இந்த செய்தியை ஆப் செய்ய திமுக முதலில் தேதியை மாற்ற சொல்லி நெருக்கடி கொடுத்து, அதற்கு “விநாயகர் சதுர்த்தி”-யை காரணமாக கூறி தேதியை மாற்றவைத்துள்ளது.
தேதி மட்டுமல்லாமல் இன்னும் எக்கச்சக்கமான முறைகளில் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால் சமூக வலைத்தளங்கள் அனைத்துமே “தமிழக வெற்றி கழகதிற்கு” ஆதரவாக பதிவுகளை பதிவிட்டு பெரிய அளவில் விஜயை வளர்த்துவிடுகின்றனர்.
எதிரியை எதிர்த்து நிற்கிறோம் அதனால் எதிரியின் வளர்ச்சி இன்னும் மேலோங்கித்தான் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியாமல், திரும்ப திரும்ப இடைஞ்சல் கொடுத்து விஜய் கட்சிக்கு ஆளுங்கட்சியே மிகப்பெரிய ஆதரவை திரட்டி கொண்டிருக்கிறது.
மதுரை மாநாட்டை எதிர்நோக்கித்தான் தமிழகமே காத்து கொண்டிருக்கிறது. இந்த மாநாடு நடைபெற்றால் 50% வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும் என கருத்துக்கணிப்பு சொல்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த மாநாடு நடந்தால் ஆளுங்கட்சி ஆட்டம்காணும் எனவும் பேசிக்கொள்கிறார்கள். மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து நிற்கும் “TVK” இவ்வளவு பிரச்சினைகளையும் தாண்டி வெற்றிகரமாக மாநாட்டை நடத்தி முடிக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம்.