Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகம் பட்டி தொட்டி எல்லாம் பறக்கும் விதமாக சின்னத்திரை ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்தது. அந்த வகையில் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் போய்க் கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று சில தடங்கல்கள் வந்ததால் அவசர அவசரமாக முதல் பாகத்தை முடித்துவிட்டு கொஞ்சம் பிரேக் விட்டார்கள்.
அதன் பிறகு எதிர்நீச்சல் தொடர்கிறது என்று இரண்டாம் பாகம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் எதிர்பார்த்த அளவிற்கு கதைகள் எதுவும் இல்லை என்றாலும் போகப்போக மக்களை கவரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதுவும் கடந்த இரண்டு வாரங்களாக விட்ட இடத்தை பிடித்து விட்டது என்று சொல்வதற்கு ஏற்ப பார்கவி தர்ஷன் கல்யாணம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஒரு விஷயம் எதிர்பாராத விதமாக நடக்கப் போகிறது. அதாவது குணசேகரன் வீட்டு மருமகளாக இருக்கும் ஜனனி ரேணுகா ஈஸ்வரி மற்றும் நந்தினி இவர்களில் ஒரு உயிர் பறி போகப்போகிறது. குணசேகரன் வச்ச குறியில் பலியாடாக சிக்கப் போவது யார் என்றால் ஈஸ்வரி தான். அதாவது ஜனனியை காப்பாற்ற வேண்டும், ஜனனி தான் அந்த வீட்டிற்கு தூண் என்று ஈஸ்வரி முடிவு எடுத்ததால் ஜனனியை காப்பாற்றும் விதமாக ஈஸ்வரி அவருடைய உயிரை கொடுத்து விடுகிறார்.
இப்பொழுது கதை எதிர்பார்த்தபடி இல்லை என்றாலும் போகப்போக நிச்சயம் குணசேகரன் வீட்டு நான்கு மருமகள் ஜெயித்து காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் ஒரு உயிர் போவதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு ரொம்பவே கவலையாக இருக்கிறது. குணசேகரனின் தாய்மாமா சொன்னபடி ஒரு உயிர் போகுது என்று சொன்னதற்கு ஏற்ற மாதிரி ஈஸ்வரி கதை முடிய போகிறது.