Ethirneechal 2 Serial1: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பொருத்தது போதும் பொங்கி எழலாம் என்று சூறாவளியாக மாறிய ஜனனியின் அதிரடி ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது. அதாவது குணசேகரன் சொன்னபடி தர்ஷன் ஜீவானந்தம் கஸ்டடியில் தான் இருக்கிறார் என்பதை நம்பும் வகையில் கரிகாலன் மூலம் ஒரு வீடியோ கிடைத்துவிட்டது.
உடனே இதுதான் சான்ஸ் என்று எல்லாத்துக்கும் காரணம் ஈஸ்வரி என நினைத்து குணசேகரன் ஒட்டுமொத்த கோபத்தையும் காட்டி ஈஸ்வரியே அடித்து விடுகிறார். இதோடு விடாமல் கையில் ஒரு துப்பாக்கிய வைத்துக் கொண்டு மிரட்டும் அளவிற்கு வன்மத்தை காட்டி பெண்களை அடக்கி ஆணாதிக்க திமிரால் குணசேகரன் எல்லையை மீறிவிட்டார்.
இதெல்லாம் பார்த்து ஜனனி எதிர்நீச்சலாக எழுந்து நீச்சல் போட குணசேகரனை எதிர்த்து நிற்க தயாராகி விட்டார். உங்களுடைய ஆணாதிக்க திமிருக்கும், பயத்துக்கும் அடங்கிப் போகிற ஆள் நான் கிடையாது. என்ன சொல்ல வருகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியாத மூர்க்கத்தனமானஉங்களிடம் பேசுவதற்கு இனி ஒன்னும் இல்லை என்று ஜனனி வாயை திறந்து பேச ஆரம்பித்து விட்டார்.
அந்த வகையில் குணசேகரை எதிர்த்து துணிச்சலுடன் இருக்கும் ஜனனிக்கு சப்போர்ட்டாக மற்ற பெண்களும் போராட போகிறார்கள். இவர்களுக்கு சப்போர்ட்டாக இல்லையென்றாலும் ஜீவானந்தத்திற்கு எதுவுமே தெரியாமல் பார்க்கவி வாத்தியார் தர்ஷனை காப்பாற்றி இருக்கிறார். இனி விஷயத்தை கேள்விப்பட்ட பிறகு அறிவுக்கரசி குணசேகரனை தோற்கடிக்கும் விதமாக ஜீவானந்தம் அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார்.
இனி எல்லா ஆட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜனனி மற்றும் மற்ற பெண்கள் எதிர்நீச்சல் போட்டு குணசேகரன் மூஞ்சில் கரியை பூசி அனல் பறக்கும் அதிரடியான கதைக்களமாக மாறப்போகிறது.