Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், எல்லா பிரச்சனைக்கும் ஜீவானந்தம் கிட்ட தான் தீர்வு இருக்கிறது என்பதற்கு ஏற்ப தான் கதை நகர்ந்து வருகிறது. அறிவுக்கரசி கொடுத்த கொடச்சலால், பார்க்கவி வாத்தியார் கொடைக்கானல் பக்கம் போனார்கள். இவர்கள் போனதும் தர்ஷனுக்கு புத்தி தெளிந்து போனதால் குணசேகரன் பார்த்து வைத்த கல்யாணம் வேண்டாம் என்று காலேஜிலிருந்து ஓடிப்போய் கொடைக்கானலுக்கு தஞ்சம் அடைந்து விட்டார்.
இவர்களெல்லாம் சுற்றி சுற்றி கொடைக்கானலில் தான் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்ட அறிவுக்கரசி, எப்படியாவது பார்கவி வாத்தியார் கதையை முடித்துவிட்டு தர்ஷனை தூக்கிட்டு வரவேண்டும் என்று பிளான் பண்ணினார். அப்படி போட்ட பிளானில் எதிர்ச்சியாக ஜீவானந்தனிடம் பார்க்கவி வாத்தியார் தர்ஷன் அடைக்கலம் தேடிக் கொண்டார்கள்.
தற்போது ஜீவானந்தம் கூட தான் இவர்கள் அனைவரும் இருக்கிறார்கள் என்று குணசேகரன் அறிவுகரசி கதிர் என அனைவருக்கும் தெரிந்த நிலையில் இதற்கு காரணம் ஈஸ்வரி மற்றும் வீட்டில் இருக்கும் 3 பெண்களும் தான் என்று அனைவரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் கோபமடைந்த குணசேகரன், ஈஸ்வரியை அடித்து பயங்காட்டி ஆணாதிக்கம் திமிரை வைத்து அடக்க பார்க்கிறார்.
ஆனால் ஜனனி, பொருத்தது போதும் இனியும் உங்களிடம் அடிமையாக பயந்து கொண்டு இருக்க மாட்டோம் என்று சொல்லிவிடுகிறார். இருந்தாலும் அதே வீட்டுக்குள் இருந்து தான் புலம்பிக் கொள்கிறார்கள். தர்ஷன் ஜீவானந்தம் கூட தான் இருக்கிறான் என்று தெரியும். அதே நேரத்தில் பார்க்கவி மற்றும் வாத்தியாருக்கும் பிரச்சனை என்று தெரியும். அந்த வகையில் பார்கவிக்கும் வாத்தியாருக்கும் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது. அவர்களை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஆவது ஜனனியும் ஈஸ்வரியும் கிளம்பி போக வேண்டும்.
எதுவுமே பண்ணாமல் வீட்டில் இருந்து கொண்டே வாயாலேயே வடை சுட்டால் குணசேகரன் அடக்க தான் செய்வார். இதனைத் தொடர்ந்து ஜீவானந்தத்தை தேடி அறிவு, சக்தி மற்றும் கதிர் என அனைவரும் கொடைக்கானல் வத்தலகுண்டு பக்கத்தில் போகிறார்கள். இங்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்றால் அட்லீஸ்ட் ஜனனி, கொற்றவைக்காவது தகவலை சொல்ல வேண்டும். அதுவும் ஜனனி பண்ணாமல் பொம்மையாக இருக்கிறார்.
இல்லையென்றால் ஜீவானந்தத்தின் மனைவி இறப்பிற்கு காரணம் கதிர் தான் என்று ஜீவானந்தம் கொற்றவைவியிடம் வாக்கு மூலம் கொடுத்தால் அதன் மூலமாக கதிர் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அது எதையும் பண்ணாமல் குணசேகரன் கதிர் அறிவுகரசின் ஆட்டத்தை அதிகரித்து விட்டு தத்தளிப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும். ஆனால் ஜீவானந்தம் கிட்ட அறிவுக்கரசி ஆட்டம் எடுபடாது. நிச்சயம் இதோடு அறிவுகரசின் ஆட்டம் கிளோஸ் என்பதற்கு ஏற்ப ஜீவானந்தம் மொத்தமாக அடக்கி விடுவார்.