Ethirneehal 2 Seial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பார்கவி வாத்தியார் தர்ஷன் மூன்று பேரும் ஜீவானந்தம் கூட தான் இருக்கிறார்கள் என்ற விஷயம் குணசேகரன் மற்றும் அறிவு கும்பலுக்கு தெரிந்துவிட்டது. அதனால் இதற்கெல்லாம் காரணம் ஈஸ்வரி தான் என்று குணசேகரன் நினைக்கிறார். இன்னொரு பக்கம் தர்ஷனை கூட்டிட்டு வரவேண்டும் என்றால் போலீசில் கம்பளைண்ட் கொடுக்கலாம் என்று அறிவு, கதிரிடம் சொல்கிறார்.
அதனால் சக்தி இடம் இருக்கும் வீடியோவை வைத்து போலீஸ், ஜீவானந்தத்தை கண்டுபிடித்து தர்ஷனை பற்றி விசாரிப்பார்கள் என்பதற்காக சக்தியையும் கூட்டிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லோரும் கிளம்பி விட்டார்கள். அதே நேரத்தில் குணசேகரன், தர்ஷனை கூட்டிட்டு வந்தால் மட்டும் போதாது. ஜீவானந்தம் பார்கவி குடும்பத்தையும் காலி பண்ண வேண்டும் என்று கோபமாக சொல்கிறார்.
இதைக் கேட்ட ஜனனி, உங்களுக்கு தர்ஷனை வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்பதை விட உங்க வன்மத்தை தீர்க்க இது ஒரு சான்ஸாக பயன்படுத்திக் கொள்கிறீர்கள் என்று சொல்கிறார். உடனே ஈஸ்வரி உங்களால் ஜீவானந்தம் பார்கவி குடும்பத்திற்கும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன்.
உங்களை மாதிரி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி துப்பாக்கி தூக்கி பயமுறுத்தவும் மாட்டேன். எங்கே போய் யாரிடம் சொல்ல வேண்டும் என்று எனக்கு தெரியும் என குணசேகரனை ஈஸ்வரி மிரட்டி விடுகிறார். அடுத்ததாக ஜீவானந்தம், ஈஸ்வரிக்கு போன் பண்ணி பேசுகிறார். அப்பொழுது நடந்த விஷயத்தை சொல்லிய நிலையில் ஜனனி, தர்ஷனை இப்போதைக்கு வீட்டுக்கு விட வேண்டாம்.
அவனும் பார்கவி குடும்பமும் உங்க கஸ்டடியிலேயே இருக்கட்டும். இங்கே எல்லா பிரச்சினைகளும் சரியான பிறகு நான் சொல்கிறேன். அப்பொழுது வந்தால் போதும் என்று சொல்லிவிடுகிறார். ஏற்கனவே இவங்களை காப்பாற்ற வேண்டும் என்று ஜீவானந்தம் முடிவெடுத்துவிட்டார். தற்போது ஈஸ்வரி ஜனனியும் சொல்லிய நிலையில் இனி தர்ஷன் பார்கவி குடும்பத்தை யாரும் கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு ஜீவானந்தம் பார்த்துக் கொள்வார்.
அதனால் இவர்களை கண்டுபிடித்து விடலாம் என்று ஈசி என்று கணக்குபோடும் அறிவு மற்றும் கதிர் கும்பலை கதற கதற சுத்த விட போகிறார். அடுத்ததாக குணசேகரன், ஈஸ்வரியை கூப்பிட்டு ஒழுங்கு மரியாதையாக தர்ஷன் இருக்கும் இடத்தை சொல்லிவிடு என்று கேட்கிறார். அதற்கு ஈஸ்வரி இதுவரை ஒரு நல்ல மனுஷன் ஆகவும் புருஷனாகவும் நடந்து கொண்டதில்லை. இனி ஒரு அப்பாவாக நீங்கள் யோசித்து ஒரு நல்ல முடிவை எடுத்தால் தர்ஷன் உங்களை தேடி தானாக வருவான்.
அவன் ஒன்னும் சின்ன பையன் இல்லை, விவரம் தெரியாமல் இருப்பதற்கு. தற்போது அவனுக்கு சில விஷயங்கள் தெரியும், அதனால் சில விஷயங்கள் பிடிக்காததால் தனியாக இருக்கிறான். நீங்கள் உங்களை மாற்றிக் கொண்டால் நிச்சயம் அவன் வருவான் என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும் ஈஸ்வரி, இப்படியே விட்டால் தர்ஷன் இங்கே வராமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது தர்ஷன் உடைய வீடு அவன் இங்கே இல்லாமல் வேறு எங்கே போய் இருக்க முடியும்.
அதனால் தர்ஷன் இங்கே வரவேண்டும் என்றால் குணசேகருக்கு நான் சில டிமாண்ட் வைக்கப் போகிறேன். ஓகே என்றால் தர்ஷனை கூட்டிட்டு வரலாம் என்று முடிவு எடுக்கிறார். அந்த வகையில் ஈஸ்வரி, குணசேகரனிடம் கேட்கும் வேண்டுகோள் என்னவென்றால் ஜீவானந்தம் மற்றும் பார்க்கவி குடும்பத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது. அதே மாதிரி தர்ஷன் ஆசைப்பட்ட மாதிரி நல்ல படித்து அவனுக்கு பிடிச்ச வேலையில் சேர வேண்டும்.
அதன் பிறகு தர்ஷன் யாரை கல்யாணம் பண்ண வேண்டுமோ அவன் பண்ணிக்கிடட்டும். அதுவரை நீங்கள் அவனை தொந்தரவு பண்ணக்கூடாது என்று டிமாண்ட் பண்ண போகிறார். வழக்கம் போல் குணசேகரன் ஒத்துக் கொள்ளாமல் கதிர் மற்றும் அறிவு மூலம் ஆட்டத்தை ஆரம்பிப்பார்.