Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், சும்மாவே அறிவு ஓவராக ஆடுவார். இப்பொழுது உன் இஷ்டப்படி என்ன வேணாலும் பண்ணிக்கோ என்று குணசேகரன் சொன்னதற்கு பிறகு சும்மாவா இருப்பார். இதுதான் சான்ஸ் என்று ஒட்டுமொத்த குடும்பத்தையும் தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரம் பண்ண ஆரம்பித்து விட்டார்.
ஆனால் தன் புருஷன் மீது தவறு இருந்தாலும் தொடர்ந்து பாவங்களை செய்து வரும் குணசேகரன் கதிர் எல்லாம் வெளியே சந்தோஷமாக இருக்கும் பொழுது எதற்காக ஏன் புருஷன் மட்டும் ஜெயிலுக்கு போக வேண்டும் என்று ரேணுகா அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக பேசுகிறார். அத்துடன் இதற்கு நியாயம் கேட்கும் விதமாக குணசேகரன் இடம் போய் கேள்வி கேட்கிறார்.
என் பிள்ளை கல்யாணத்துக்காக தான் நான் வெளியே வந்தேன், அப்படி எனக்கு ஜெயிலில் இருக்க விருப்பம் தான் என்று சொன்ன நீங்க ஏன் செஞ்ச தப்புக்கு ஜெயிலுக்கு போகாமல் ஏன் புருசனை பலியாடாக சிக்க வைத்து விட்டீங்க. அப்படி உங்களுக்கு போக விருப்பம் இல்லை என்றால் அட்டூழியம் பண்ணிவரும் உங்க தம்பி கதிரை போக சொல்லி இருக்க வேண்டியது தானே என்று சொல்கிறார்.
ஆனால் கதிர் அண்ணன் மனைவி என்று கூட பாராமல் மரியாதை இல்லாமல் பேசி எல்லை மீறும் அளவிற்கு ஓவராக நடந்து கொள்கிறார். இந்த கதரின் ஆட்டத்தை அடக்கும் விதமாக நந்தினியும் ஏதாவது செய்து கதிரை எந்திரிக்க விடாமல் பண்ண வேண்டும். அதாவது அறிவுக்கரசியை கூட்டிட்டு போய் வெளுத்து வாங்குவது போல் கதிரையும் தனியாக கூட்டிட்டு போய் வெளுத்து விட வேண்டும்.
அப்பொழுதுதான் இந்த கதரின் ஆட்டமும் அடங்கும். மேலும் அறிவுக்கரசி பெண்களிடம் அடி வாங்கியதை அவமானமாக நினைத்து அடுத்து எதுவும் பண்ண முடியாமல் அடங்கிப் போய் இருக்கிறார். ஆனால் அவமானப்பட்ட காயத்துடன் எல்லாத்தையும் உண்டு இல்லைன்னு பண்ணும் விதமாக அதிரடியாக ஏதாவது செய்ய முயற்சி பண்ணுவார். இருந்தாலும் இனி குணசேகரன் வீட்டு பெண்களுக்கு மட்டுமே வெற்றி என்பதற்கு ஏற்ப ஜெயித்து காட்டப் போகிறார்கள். இதில் முதல் வெற்றியாக தர்ஷன் பார்கவி கல்யாணம் நடக்கப் போகிறது.