Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், குணசேகரன் அறிவு கதிர் மூன்று பேரும் சேர்ந்து தர்ஷனுக்கு அன்புக்கரசியை கல்யாணம் பண்ணி வைத்து வீட்டில் இருக்கும் பெண்கள் முகத்தில் கரியை பூச வேண்டும் என்று நினைக்கிறார்கள். இவர்களுடைய திட்டத்தை தெரிந்து கொண்ட ஈஸ்வரி அதற்கு ஏற்ற மாதிரி பிளான் பண்ணி விட்டார்.
அதாவது தர்ஷனை தனியாக சந்தித்து பேசி பார்க்கவிக்கும் உனக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கிறேன். அவளுடைய வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகி போனதற்கு நீயும் ஒரு காரணம். அதனால் அதை சரி செய்யும் விதமாக நாம் பார்க்கவியை நல்லபடியாக பார்த்து, அவளுடைய இலட்சியத்துக்கு சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கேட்டார்.
தர்ஷனும் எனக்கும் இதுதான் ஆசை என்று சொல்லி ஈஸ்வரி போட்ட பிளானுக்கு சம்மதம் கொடுத்துவிட்டார். அந்த வகையில் பார்க்கவியையும் சம்மதிக்க வைத்து கல்யாணத்தை முடிப்பதற்கு தயாராகி விட்டார்கள். இன்னொரு பக்கம் தர்ஷனை விட்டு குணசேகர்னிடம் எனக்கு அன்புவே கல்யாணம் பண்ணிக் கொள்ள சம்மதம் என்று சொல்ல வைத்து விட்டார்கள்.
அதன்படி தர்ஷனும் சொல்லிய நிலையில் கல்யாண வேலைகள் ஆரம்பமாகப் போகிறது. ஆனால் இந்த கல்யாணம் குணசேகரன் கும்பல் நினைத்தபடி இருக்காது ஈஸ்வரி போட்ட பிளான் படி பார்க்கவிக்கும் தர்ஷனுக்கும் கல்யாணம் நடந்துவிடும். இவர்களிடம் அறிவுக்கரசி தோற்றுப் போய் நிற்கப் போகிறார்.