Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பார்க்கவி தர்ஷன் கல்யாணத்தை வைத்து குணசேகரன் அறிவுக்கரசி கும்பலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஈஸ்வரி பிளான் பண்ணினார். ஈஸ்வரி பிளானை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்பதற்கு ஜனனி ஜீவானந்தம் சப்போர்ட் பண்ணினார்கள்.
ஆனால் இதையெல்லாம் கெடுக்கும் விதமாக தர்ஷன் மாடியில் தனியாக இருந்த பார்க்கவியை சந்தித்து பேசினார். இதை பார்த்து அன்பு இவர்கள் இருவரையும் ஒரே ரூம்குள் வைத்து லாக் பண்ணி விட்டார். பிறகு அறிவுக்கரசிக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி ஒரு பிரளயத்தையே உருவாக்கி விட்டார்.
இது தான் சான்ஸ் என்று அறிவுக்கரசியும் ஆர்ப்பாட்டம் பண்ணி ஜனனி மற்றும் பார்க்கவியை பாடாபடுத்தி எடுத்து விட்டார். இதை எல்லாம் பார்த்த குணசேகரன், புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்று ஜட்ஜிடம் எங்களால் பார்கவிக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இந்த பார்க்கவி எங்க வீட்டில் வந்து இருப்பது தான் எங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை என்று சொல்லிவிடுகிறார்.
அதன்படி பார்கவி இந்த வீட்டை விட்டு போக வேண்டும் என்று கோர்ட் உத்தரவு கொடுத்து விட்டது. அந்த வகையில் ஜீவானந்தத்துடன் பார்க்கவியை அனுப்பி வைக்கும் பொறுப்பாக குணசேகரன் காய் நகர்த்திவிட்டார். அத்துடன் ஜீவானந்தத்துடன் போன பார்க்கவியிடம் வீர வசனம் பேசும் விதமாக ஜனனி, இங்கிருந்து நீ போனாலும் உனக்கு நடந்த அநியாயத்துக்கு நான் நிச்சயம் தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று வாய் சவடால் விடுகிறார்.
ஆனால் குணசேகரன், அறிவுகரசிடம் என்னுடைய பிளான் என்னவென்று இப்பொழுது புரிஞ்சுதா என கேட்க, அறிவுக்கரசியும் சந்தோசமாக புரிந்தது என்று சொல்கிறார். ஒரு பக்கம் சந்தோசமாக கல்யாண வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டார், இன்னொரு பக்கம் அந்த ஜீவானந்தம் பார்க்கவி கதையை முடிக்கும் விதமாக ஸ்கெட்ச் போட ஆரம்பித்துவிட்டார்.