Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், பாசத்தை காட்டினால் தன் மகன் திரும்பி விடுவான் என்ற நம்பிக்கையில் ஈஸ்வரி குணசேகரன் வீட்டிற்குள் நுழைந்தார். ஆனாலும் தர்ஷன் அடங்காமல் குணசேகரன் பேச்சைக் கேட்டு கதிர் போல் ஓவராக துள்ளி குதித்து வந்தார். ஆனாலும் பொறுமையாக இருந்த ஈஸ்வரி கொஞ்சம் கொஞ்சமாக தர்ஷன் உடன் பேசி பழகி நல்லவிதமாக மாற்றிவிட்டார்.
தற்போது தர்ஷனும் எது எதார்த்தம், வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிந்து கொண்டார். அதனால் தற்போது நமக்கு ஒரு நல்ல வேலை வேண்டும் அதன் பின்பு தான் கல்யாணம் என்று முடிவுக்கு வந்த நிலையில் வீட்டில் இருப்பவர்களிடம் கல்யாணம் இப்போதைக்கு வேண்டாம் என்று சொன்னார். ஆனால் மூர்க்கத்தனமாக இருக்கும் குணசேகரன் கதிர், தர்ஷன் பேச்சை கேட்க மறுத்துவிட்டார்கள்.
போதாதற்கு அறிவுக்கரசியும் தர்ஷனை அடிமையாகப் பார்த்தார். இதனால் வேற வழி இல்லாமல் தர்ஷன் உங்க சங்கார்த்தமே வேண்டாம் என்று காலேஜிலிருந்து தப்பித்து ஓடி விட்டார். தப்பித்து ஓடிய தர்ஷன் பார்கவி இருக்கும் இடத்தை நோக்கி போய்விட்டார். தர்ஷன் காணவில்லை என்று தெரிந்ததும் அறிவுக்கரசி குணசேகரன் கதிர் பெரிய ஆர்ப்பாட்டம் பண்ணி வீட்டில் இருக்கும் பெண்களை வெளியே விடாமல் அடைத்து விட்டார்.
ஆனாலும் சக்தி, ஈஸ்வரிக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக தர்ஷனை நான் கண்டுபிடித்து கூட்டிட்டு வருகிறேன் என்று ஆறுதல் படுத்து இருக்கிறார். அந்த வகையில் அறிவுக்கரசியின் அண்ணன் முல்லை கூட சக்தி கரிகாலனும் தர்ஷனை தேடி போயிருக்கிறார்கள். இதற்கு இடையில் அறிவுக்கரசி, முல்லைக்கு போன் பண்ணி பார்கவி குடும்பத்தை முடித்து விட சொல்லிவிட்டார்.
அதே மாதிரி தர்ஷனையும் காலி பண்ண சொல்லிவிட்டார், இதெல்லாம் பண்ண வேண்டும் என்றால் சக்தியை கழட்டி விட வேண்டும் என்று முல்லை முடிவு பண்ணி விட்டார். அதனால் வழக்கம்போல் சக்தி கதையை ஓரங்கட்டி விட்டு ஜீவானந்தம் என்டரி கொடுக்கப் போகிறார். இப்பொழுதுதான் தர்ஷினி கடத்தல் விஷயத்திலும் சக்தி தான் கடைசி வரை கண்டுபிடிப்பதற்கு முயற்சி எடுத்தார்.
ஆனால் கடைசியில் சக்திக்கு அடிபட்டது போல் காட்டிவிட்டு சக்தி கேரக்டரை ஓரங்கட்டி ஜீவானந்தம் ஹீரோசம் கட்டினார். அதேபோல் தற்போது சக்தி கதையை ஓரம் கட்டி விட்டு ஜீவானந்தம் என்டரி கொடுக்கிறார். அது மட்டும் இல்லாமல் அறிவுக்கரசி மூலம் பார்க்கவிதர்சனுக்கு ஆபத்து வரப் போகிறது என்பதால் இவர்களை காப்பாற்றும் விதமாக ஜீவானந்தம் வரப்போகிறார்.