Ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், எதிர்பார்த்த படி கதை சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. இதுவரை வாங்கிய நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் ஓரம் தள்ளும் விதமாக மருமகள்களின் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. அதாவது குணசேகரன் டிராமா பண்ணுகிறார் என்று நமக்குத் தெரிந்தாலும் அதை ஈஸ்வரி நம்பும் படியான ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
இதனால் ஜீவானந்த இடம் பேசி பார்கவி தர்ஷன் மற்றும் வாத்தியார் அனைவரையும் வீட்டிற்கு கூட்டிட்டு வர சொன்னார்கள். ஜீவானந்தமும், ஈஸ்வரி சொன்னதை நம்பி அவர்களை வீட்டிற்கு கூட்டிட்டு வந்தார். ஆனால் வீட்டிற்கு வந்ததும் குணசேகரன் சுயரூபத்தைக் காட்டி தர்ஷனை அடித்து அவருடைய கண்ட்ரோலுக்கு கூட்டிட்டு போய்விட்டார்.
இதெல்லாம் போதாது என்று கதிர் மற்றும் அறிவுக்கரசி, பார்க்கவி மற்றும் வாத்தியாரை துன்புறுத்தும் அளவிற்கு அடித்து சித்தரவதை செய்து விட்டார்கள். பிறகு ஜீவானந்தம் அவர்களிடமிருந்து பார்க்கவி மற்றும் வாத்தியாரை கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு போனார்.
ஆனால் போகும்பொழுதே வாத்தியாருடைய உயிர் பரிதாபமாக போய்விட்டது. இதனால் தன்னந்தனியாக இருக்கும் பார்க்கவி, அப்பாவை நினைத்து பீல் பண்ணி நிற்கிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நான்கு பெண்களும் பார்கவிக்கு துணையாகவும் நடந்த அநியாயத்துக்கு குரல் கொடுக்கும் விதமாக தண்டனை வாங்கி கொடுக்கவும் தயாராகி விட்டார்கள்.
அப்பொழுது அன்புக்கரசி, குணசேகரன் வீட்டிற்கு மணப்பெண்ணாக வந்து தர்ஷன் உடன் கல்யாணம் பண்ணுவதற்கு தயாராகி விட்டார். இதெல்லாம் பார்த்த நான்கு மருமகள்கள், வாத்தியார் உயிர் போனதை சொல்லி கதிர் மற்றும் குணசேகரன் இடம் நியாயம் கேட்கிறார்கள். ஆனால் கதிர் வழக்கம்போல் திமிராக பேசி நான்கு மருமகள்களையும் வெளியே விடாமல் அடக்கி விடலாம் என்று தெனாவட்டாக பேசினார்.
ஆனால் பொறுத்தது போதும் என்று ஜனனி, கதிரை அடித்து நீங்கள் செய்த தவறுக்கு கண்டிப்பா நாங்கள் தண்டனை வாங்கி கொடுப்போம் என்று கிளம்பி விடுகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து தர்ஷினியும் கிளம்பி பார்க்கவிக்கு சப்போர்ட் ஆக நிற்கிறார். பிறகு இந்த விஷயத்தை எல்லாம் கேள்விப்பட்டு போலீஸ் வந்தாலும் சட்டப்படி எதுவும் செய்யாமல் அறிவுக்கு ஒத்து ஊதும் விதமாக தான் நிற்கிறார்கள்.
இதனால் இவரை நம்பி பிரயோஜனம் இல்லை என்று முடிவு பண்ணிய ஜனனி இந்த விஷயத்தை சோசியல் மீடியாவுக்கு கொண்டு போகும் விதமாக நடந்த விஷயத்தை சொல்கிறார். பிறகு இதை பார்த்த சாருபாலா, ஜனனிக்கு போன் பண்ணி நீங்க போற வழி சரியான வழி, அதன்படி எல்லாம் நீங்கள் செய்ங்க. நான் சட்டப்படி என்ன பண்ண முடியுமோ அதை செய்து தண்டனை வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லிவிடுகிறார்.
இதனால் இவ்வளவு நாள் ஆட்டம் போட்ட குணசேகரன் கதிர் மற்றும் அறிவுக்கரசி கும்பலுக்கு பெண்கள் சேர்ந்து தண்டனை வாங்கி கொடுத்தது மட்டுமில்லாமல் இனி அவர்களை அடக்கும் விதமாக ஆட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள். இப்பொழுது தான் எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு உயிர் வந்திருக்கிறது என்பதற்கேற்ப ஜீவானந்தம் கதையை சுவாரசியமாக கொண்டு வருகிறார்.