எதிர்பார்ப்பை எகிற வைத்து பல்பு கொடுத்த மணிரத்தினத்தின் 5 படங்கள்.. கதற விட்ட தக் லைஃப் – Cinemapettai

Tamil Cinema News

Thug Life: மணிரத்தினம் ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்றாலே ரசிகர்களுக்கு அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விடும். இதற்கு முக்கிய காரணம் அவருடைய முந்தைய படங்களின் வெற்றி தான் என்பது நிதர்சனமான உண்மை.

சில நேரங்களில் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் மணிரத்தினத்தின் நிலைமை ஆனதுண்டு. படத்தின் மீதான மக்களின் அதீத எதிர்பார்ப்பும் அவருடைய படங்களை சமீப காலமாக சரிய வைத்து இருக்கிறது. அப்படிப்பட்ட ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

கடல்: மணிரத்தினம் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் துளசி நாயர் அறிமுகமான படம் கடல். நவரச நாயகன் கார்த்திக் மகன் மற்றும் ராதாவின் மகள் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள் என்பதே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு கிளம்ப காரணம்.

இது தொடர்ந்து அரவிந்த்சாமி மற்றும் அர்ஜுன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தார்கள். ஆனால் கதைகளம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.

செக்க சிவந்த வானம்: செக்கச் சிவந்த வானம் படத்தின் தோல்விக்கு பெரிய காரணம் அந்த படத்தில் நடித்த உச்ச நட்சத்திரங்கள் தான்.

ஜோதிகா, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், விஜய் சேதுபதி என மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டம் இந்த படத்தில் இணைந்தது. இந்த நட்சத்திரங்களின் மீதான அதிக எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படாததால் படம் தோல்வி அடைந்தது.

காற்று வெளியிடை: கார்த்தி மற்றும் அதிதி ராவ் நடிப்பில் மணிரத்தினம் இயக்கிய படம் காற்று வெளியிடை. இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மணிரத்தினம் உதவி இயக்குனராக இருந்த கார்த்தி அவருடைய படத்தில் ஹீரோவாக நடிப்பது படத்தின் மீதான பாசிட்டிவ் எதிர்பார்ப்பை ரொம்பவே அதிகரித்தது. ஆனால் திரைக்கதை எதிர்பார்த்த அளவு இல்லை.

பொன்னியின் செல்வன் 2: முடி கணக்கில் இருக்கும் பொன்னியின் செல்வன் வாசகர்களின் கனவை கண்முன் கொண்டு வந்தார் மணிரத்தினம். வாசகர்களை தாண்டி ஜெனரஞ்சகமான ரசிகர்களிடம் இந்த படம் எடுபடவில்லை.

அவ்வளவு பெரிய புத்தகத்தை இரண்டு பாகங்களாக படமாக காட்டுவது என்பது சாத்தியமல்ல. அதை திரைக்கதையாக கொண்டு வரும்போது புத்தகத்தை படிக்காத பலருக்கும் படம் தெளிவாக புரியாமல் போய்விட்டது.

தக் லைஃப் : 30 வருடங்களுக்குப் பிறகு மணிரத்தினம் மற்றும் கமலஹாசன் தக் லைஃப் படத்தில் இணைவதாய் அறிவிப்பு வந்த போதே இந்த படம் ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மேலும் சிம்பு கமிட் ஆனதிலிருந்து அவருடைய ரசிகர்களும் படத்தை எதிர்பார்க்க ஆரம்பித்தார்கள்.

கடைசி செக்கச்சிவந்த வானம் படத்தின் கதையை அப்படியே மாற்றி இயக்கியிருக்கிறார் என்பது போல் ஆகிவிட்டது. இந்தியன் 2-க்கு பிறகு கமலுக்கு இந்த படம் அதிக நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்திருக்கிறது.

Join the best Tamil Chat Room to connect instantly with Tamil friends worldwide. Chat, call, share, and enjoy live Tamil FM , Start Chatting Now!

Social Media

Join with our Social Media pages to get immediate updates!

Copyright © 2025. Startamilchat.in All rights reserved.