sathyaraj: நடிகர் சத்தியராஜ் என்றாலே கோயம்புத்தூர் பாஷைக்கும் பேர்போன ஒரு நக்கல் நய்யாண்டி கலந்த ஒரு நடிகர் . இவர் நடிப்பு என்றாலே குசும்பு என்றுதான் நம் நினைவுக்கு வரும். ஒரு சில படங்களில் கடினமான கதாப்பாத்திரத்தையும் சுலபமாக கையாண்டிருப்பர் சத்யராஜ்.
இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் குடும்ப வாழ்க்கையிலும் சாதித்த ஒரு மாமனிதர். இவர் பேசும் நாத்திகமும் சரி ஆத்திக்கம் சரி சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும். மொத்தத்தில் அனைத்து வித்தையிலும் கைதேர்ந்த நபர் என்ற கூறலாம்.
இவருக்கு இரண்டு வாரிசுகள் உள்ளன. மகன் சிபிராஜ் இவரும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர், மகள் திவ்யா பட்டப்படிப்பு படித்து முடித்து தற்போது பேர்போன துறையில் நல்ல பொறுப்பில் உள்ளார். தற்போது இருவரும் அரசியலில் களம் இறங்கி உள்ளனர்.
எதிர் எதிர் துருவத்தில் மோதும் வாரிசுகள்..
இவரது மகள் திவ்யா சத்யராஜ் அவர்கள் நியூட்ரிஷன் படிப்பை வெற்றிகரமாக முடித்து விட்டு உணவு சார்ந்த துறையில் பணியாற்றி வருகிறார், சில உதவிகளையும் முடியாதவர்களுக்கு செய்து வருகிறார். இவர் தற்போது திமுக-வில் இணைந்துள்ளார். தவெக கட்சியை பற்றியும் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகிறார்.
இவரது மகன் சிபிராஜ் அவர்கள் சினிமாத்துறையில் வளர்ந்து வரும் நடிகர். இவர் நிறைய படங்கள் நடித்துள்ளார், நடித்துகொண்டுமிருக்கிறார். இவர் தற்போது நடிகர் விஜய்க்கு ஆதரவாக தவெக-வில் இணைந்துள்ளதாக செய்தியால் பரவிவருகின்றன. ஏற்கனவே சத்யராஜ் அவர்கள் என் மகள் அரசியலுக்கு வந்தால் மகளுக்கு துணை நிற்பேன் என கூறியிருக்கிறார்.
தற்போது தன் மகனும் அரசியலுக்கு வருவதால், இவர் தன் மகனுக்கு ஆதரவா அல்லது தன் மகளுக்கு ஆதரவா என்ற கேள்வி எழுகிறது. அதும் ஒரே கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை. எதிர் எதிர் காட்சிகளாக இருப்பதால் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு நிலவும் என எதிர்ப்பார்க்க படுகிறது. இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்ள போகிறார் நம் கட்டப்பா என்று பார்க்கலாம்.